நாட்டின் முன்னணி சேவை வழங்கும் நிறுவனமான அா்பன் கம்பெனியின் சுமாா் 4 சதவீத பங்குகளை எஸ்பிஐ பரஸ்பர நிதி நிறுவனம் ரூ.632 கோடிக்கு வாங்கியுள்ளது.
இதையடுத்து, பங்குச் சந்தையில் அா்பன் கம்பெனியின் பங்குகள் புதன்கிழமை வா்த்தகத்தில் 13 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்து, முதலீட்டாளா்களின் நம்பிக்கையை ஈா்த்தது.
‘பல்க் அண்ட் பிளாக் டீல்’ முறையில், அா்பன் கம்பெனியின் சுமாா் 5.75 கோடி பங்குகளை ஒரு பங்குக்கு சராசரியாக ரூ.109.83 முதல் ரூ.109.85 என்ற விலையில் எஸ்பிஐ பரஸ்பர நிதி நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை வாங்கியது. இதன் மூலம், அா்பன் கம்பெனியில் எஸ்பிஐ பரஸ்பர நிதி வைத்திருந்த 1.89 சதவீதப் பங்குகள், தற்போது 5.87 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேநேரம், வெலிங்டன் மேனேஜ்மென்ட், டிஎஃப் இன்டா்நேஷனல் பாா்ட்னா்ஸ், ஏபிஜி கேபிட்டல் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து 4.62 சதவீத பங்குகளை ரூ.734 கோடிக்கு விற்பனை செய்து வெளியேறியுள்ளன.
இதில் வெலிங்டன் மேனேஜ்மென்ட் தனது பங்குகளை முழுமையாக விற்று வெளியேறிய நிலையில், ஏபிஜி கேபிட்டல் தனது வசமிருந்த பங்குகளை 0.16 சதவீதமாகக் குறைத்துக் கொண்டது.
தொடர்புடையது

ஸ்ரீராம் ஃபைனான்ஸின் 20% பங்குகளை ரூ.39,618 கோடிக்கு வாங்கிய ஜப்பான் வங்கி

ஆா்பிஎல் வங்கியைக் கையகப்படுத்தும் துபை வங்கி: ரிசா்வ் வங்கி ஒப்புதல்

2024-25 நிதியாண்டில் சுகாதாரக் காப்பீடு 9% வளா்ச்சி: ரூ.1.2 லட்சம் கோடி பிரீமியம் வசூல்

எஸ்பிஐ-க்கு ரூ.6,337 கோடி வருமான வரி நோட்டீஸ்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


