புது டில்லி, மார்ச். 19 - 1976-77-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை இன்று லோக்சபையில் நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் சமர்ப்பித்துப் பேசுகையில், புதிய வரிப் பிரேரணைகளை அறிவித்தார்.
இந்த வரிப் பிரேரணைகள் மூலம் கூடுதலாக ரூ. 10.5 கோடி கிடைக்கும். அதே சமயம் ரூ.1.5 கோடிக்கு சில சலுகைகளை அறிவித்தார். எனவே புதிய வரிப் பிரேரணைகள் மூலம் ஒரு முழு ஆண்டில் கிடைக்கக்கூடிய கூடுதல் வருமானம ரூ. 9 கோடியாயிருக்கும்.
புது வரிப் பிரோணைகளின் விளைவாக ரெவினியூ பற்றாக்குறை ரூ. 12.32 கோடியிலிருந்து ரூ. 3.32 கோடியாகவும், மொத்த பற்றாக்குறை 0.98 கோடியாகவும் குறையும். இந்தப் பற்றாக்குறையை சிக்கன நடவடிக்கைகளாலும், நல்ல வரி வசூல் மூலமாகவும் ஈடுசெய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் கூறினார்.
தமிழ் நாட்டில் 1976-77-ம் ஆண்டுத் திட்டத்துக்கு ரூ.177 கோடி முதலீட்டுக்கு முன்பு ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. இதை ரூ. 201 கோடியாக உயர்த்தப்போவதாக நிதி அமைச்சர் அறிவித்தார்.
விமானம் மீது ராக்கெட் தாக்கி லெபனான் பிரதமர் மயிரிழையில் தப்பினார்
பேரூத், மார்ச். 19- பேரூத் விமான நிலையத்தில் லெபனான் பிரதமர் கராமி ஏறியிருந்த விமானம் மீது இன்று ராக்கெட் தாக்கி அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
கராமியும், முன்னாள் பிரதமர் சலீப் சலேமும் காயமின்றித் தப்பினர்.
விமான நிலையத்தின் கிழக்குக் கோடியிலிருந்து சுடப்பட்ட ராக்கெட், விமானத்தின் பின் பகுதியைத் தாக்கியது. ஒரு பத்திரிகையாளருக்குச் சிறிது காயம் ஏற்பட்டது. அந்த விமானம் சிரியா விமானப் படையைச் சேர்ந்தது.
சில வினாடிகளுக்கு முன்பு சுடப்பட்ட மற்றொரு ராக்கெட் விமானத்திலிருந்து சுமார் 15 மீட்டர் தொலைவில் விழுந்து விமானத் திடலில் வெடித்தது.
லெபனான் நெருக்கடி பற்றி பேச சிரியா அதிபர் அஸ்ஸாத்தின் அழைப்பின் பேரில் கராமியும், சலேமும் டமாஸ்கஸுக்குப் புறப்பட்டனர்.
லெபனான் சபாநாயகரின் வருகைக்காக அவர்கள் விமானத்தில் காத்திருந்தபோது தாக்குதல் நடந்தது.
விமானம் தீப்பற்றி எரிந்தது. ஆனால் விரைவில் அது அணைக்கப்பட்டது.
இதற்கிடையில் பேரூத் ஹோட்டல் பகுதியில் கடும் சண்டை நடந்தது. முஸ்லிம்களுக்கும், வலது சாரி கிருஸ்தவ பலாஞ்சிஸ்டுகளுக்கும் இடையே நடந்த சண்டையில் டாங்கிகளும் பயன்படுத்தப்பட்டன.
Summary
20.3.1976: New taxes worth Rs. 10.50 crore in the T.N. Budget
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சு

என்ஜின் திடீா் செயலிழப்பு! புது தில்லியில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!

அா்பன் கம்பெனியின் 4% பங்குகளை ரூ.632 கோடிக்கு வாங்கிய எஸ்பிஐ

11.3.1976: த.நா. அரிசி கொள்முதல் உடனடி நிறுத்தம் - கவர்னர் அறிவிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


