கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நாடு முழுவதும் 40 முதல் 50 கடைகளைத் திறக்க மேக்ஸ் ஃபேஷன் இலக்கு!

மேக்ஸ் ஃபேஷன், அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் 40 முதல் 50 கடைகளைத் திறக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2026, 1:08 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: பன்னாட்டு ஃபேஷன் பிராண்டான மேக்ஸ் ஃபேஷன், அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் 40 முதல் 50 கடைகளைத் திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) சென்னையில் 34வது கடையையும், தமிழகத்தில் 71வது விற்பனை நிலையத்தையும் நடிகை கயாது லோஹர் திறந்து வைத்தார்.

விரிவாக்கத் திட்டத்தின் கீழ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் மொத்தம் 100 கடைகளை தொடங்க மேக்ஸ் ஃபேஷன் இலக்கு வைத்துள்ளது.

சென்னை வளசரவாக்கத்தில் புதிய விற்பனை நிலையத்தின் திறப்பு விழா குறித்துப் பேசிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுமித் சந்தன், சென்னை எப்போதுமே எங்களின் ஆற்றல்மிக்க மற்றும் கலாச்சார ரீதியாக துடிப்பான சந்தைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. எங்களின் வளசரவாக்கக் கடையின் தொடக்கமானது, அதன் வளர்ந்து வரும் ஃபேஷன் சமூகத்துடன் இணைந்து வளர்வதற்கான எங்கள் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

விரிவாக்கத் திட்டங்கள் குறித்து அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு நாடு முழுவதும் சுமார் 40 முதல் 50 கடைகளைத் திறக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

சுமார் 14,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கடை, மிகவும் விசாலமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென பிரத்யேகப் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

சென்னையில் எங்களின் 34வது கடையையும், தமிழகத்தில் 71வது கடையையும் திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் மேக்ஸ் ஃபேஷன் மண்டல வணிகத் தலைவர் சதீஷ் குமார்.

தற்போது, ​​கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோயில் உள்ளிட்ட இடங்களில் எங்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அதே வேளையில், அடுத்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள கடைகளின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Summary

Max Fashion has set a target to open 40-50 stores across the country in the next year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.