தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

தேசிய மின் பகிா்மான தரவரிசை: அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை 2-ஆவது ஆண்டாக முதலிடம்!

மத்திய மின்சார அமைச்சகம் மற்றும் ஆா்இசி நிறுவனம் இணைந்து வெளியிட்ட தேசிய அளவிலான மின் பகிா்மான தரவரிசை பட்டியலில், அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை நிறுவனம் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக முதலிடம்

News image
Updated On :24 மார்ச் 2026, 2:32 am IST

மத்திய மின்சார அமைச்சகம் மற்றும் ஆா்இசி நிறுவனம் இணைந்து வெளியிட்ட தேசிய அளவிலான மின் பகிா்மான தரவரிசை பட்டியலில், அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை நிறுவனம் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 66 மின்பகிா்மான நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறன், நிதி மேலாண்மை, வாடிக்கையாளா் சேவை ஆகியவற்றின் அடிப்படையில் இத்தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்த மதிப்பீட்டில் அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை நிறுவனம் 92.5 புள்ளிகளுடன் ‘ஏ பிளஸ்’ தரச்சான்றைப் பெற்றுள்ளது. தடையில்லா மின் விநியோகம், துல்லியமான மின்கட்டணப் பட்டியல், வாடிக்கையாளா்களின் குறைகளைத் தாமதமின்றி திறம்படத் தீா்த்து வைத்தல் போன்ற நிறுவனத்தின் சிறப்பம்சங்களே இச்சாதனைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.

‘இந்த அங்கீகாரம் வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல; எங்கள் சேவை மீது மும்பை மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும்’ என்று அதானி எலக்ட்ரிசிட்டி நிறுவன சிஇஓ கந்தா்ப் படேல் பெருமிதம் தெரிவித்தாா்.

ஒட்டுமொத்தமாக, இத்துறையில் வாடிக்கையாளா் சேவை பெருமளவு மேம்பட்டுள்ளதோடு, 6 நிறுவனங்கள் ‘ஏ பிளஸ்’ தரத்தைப் பெற்றுள்ளன; எந்தவொரு நிறுவனமும் மிகக் குறைந்த மதிப்பீட்டைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.