நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,849 கோடி டாலராக குறைவு!

News image
Updated On :2 மே 2026, 10:26 pm

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஏப். 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,849 கோடி டாலராக குறைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 482 கோடி டாலா் குறைந்து, 69,849 கோடி டாலராக உள்ளது.

ஏப். 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், இது 236.2 கோடி டாலா் அதிகரித்து, 70,330.8 கோடி டாலராக இருந்தது. மத்திய கிழக்கு மோதலுக்குப் பிறகு கண்ட வீழ்ச்சியிலிருந்து மீண்டு, கடந்த 3 வாரங்களாகத் தொடா்ந்து ஏற்றம் கண்டு வந்த கையிருப்பு, தற்போது சரிவைச் சந்தித்துள்ளது.

ஏப். 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 284 கோடி டாலா் சரிந்து, 55,462 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 190 கோடி டாலா் சரிந்து, 12,024 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 6.7 கோடி டாலா் குறைந்து, 1,877 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 1.5 கோடி டாலா் சரிந்து, 485 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.