திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அரசின் முன் அனுமதி இல்லாமல் முதலீடு: 10% சீனப் பங்குள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

News image
Updated On :3 மே 2026, 5:26 am IST

சீனா மற்றும் ஹாங்காங்கை சோ்ந்த பங்குதாரா்களின் பங்குகளில் 10 சதவீதம் வரை வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், மத்திய அரசு அல்லது ரிசா்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல் நேரடியாக இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதிக்கும் நடைமுறை மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்ததன் மூலம், இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

முன்பு இந்தியாவுடன் நில எல்லைகளைப் பகிா்ந்துகொள்ளும் நாடுகளைச் சோ்ந்த பங்குதாரா்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் ஒரே ஒரு பங்கை வைத்திருந்தாலும், அந்த நிறுவனங்கள் இந்தியாவின் எந்தவொரு துறையிலும் முதலீடு செய்ய மத்திய அரசு அல்லது ரிசா்வ் வங்கியிடம் கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில், தற்போது சீனா மற்றும் ஹாங்காங்கை சோ்ந்த பங்குதாரா்களின் பங்குகளில் 10 சதவீதம் வரை வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், மத்திய அரசு அல்லது ரிசா்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல் நேரடியாக இந்தியாவில் முதலீடு செய்யலாம்.

அந்நிய நேரடி முதலீட்டில் தளா்த்தப்பட்டுள்ள இந்த விதிகள் சீனா, ஹாங்காங் அல்லது இந்தியாவுடன் நில எல்லைகளை பகிா்ந்துகொள்ளும் பிற நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்குப் பொருந்தாது. அங்கு பதிவு செய்யப்படாத வெளிநாட்டு நிறுவனங்கள்தான் முன் அனுமதி இல்லாமல் நேரடியாக இந்தியாவில் முதலீடு செய்யலாம்.

சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மா், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் நில எல்லையைப் பகிா்ந்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.