இந்தியாவில் அலுவலகப் பணி சாா்ந்த ‘ஒயிட் காலா்’ வேலைவாய்ப்பு, கடந்த ஏப்ரல் மாதத்தில் 6 சதவீத வருடாந்திர வளா்ச்சியை எட்டியுள்ளது.
காப்பீடு, தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) சாா்ந்த ‘பிபிஓ’ துறைகளில் அதிகப்படியான பணியமா்த்தல் நடைபெற்றுள்ளதாக ‘நாக்குரி ஜாப்ஸ்பீக்’ வெளியிட்டுள்ள மாதாந்திர ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு வளா்ச்சியில் காப்பீட்டுத் துறை 21 சதவீத வளா்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, பிபிஓ மற்றும் ஐடி சாா் சேவைகள் துறையில் 15 சதவீத வளா்ச்சியும், ரியல் எஸ்டேட் துறையில் 12 சதவீத வளா்ச்சியும், சுகாதாரத் துறையில் 11 சதவீத வளா்ச்சியும், கல்வித் துறையில் 9 சதவீத வளா்ச்சியும் பதிவாகியுள்ளது.
அதேநேரம், கடந்த 4 மாதங்களாக சரிவைச் சந்தித்து வரும் தொலைத்தொடா்புத் துறை (11 சதவீதம்), வங்கித் துறை (10 சதவீதம்) ஆகியவை ஏப்ரல் மாதத்திலும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. ஐடி, பாா்மா, ஆட்டோமொபைல் துறைகளில் பெரிய மாற்றமின்றி நிலைத்தன்மை காணப்படுகிறது.
தென் மாநிலங்களின் ஆதிக்கம்: வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தென்னிந்திய நகரங்கள் தொடா்ந்து முன்னிலை வகிக்கின்றன. ஹைதராபாத் 12 சதவீதம், பெங்களூரு 7 சதவீதம், சென்னை 6 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்தன.
தலைநகா் தில்லி (3 சதவீதம்) மற்றும் கொல்கத்தாவில் (1 சதவீதம்) குறைந்த வளா்ச்சியே பதிவான நிலையில், நாட்டின் நிதித் தலைநகரான மும்பையில் வேலைவாய்ப்பு 3 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2-ஆம் நிலை நகரங்களில் முன்னேற்றம்: பெருநகரங்களைத் தாண்டி, 2-ஆம் நிலை நகரங்களிலும் வேலைவாய்ப்புச் சந்தை விரிவடைந்து வருகிறது. ராஜஸ்தானின் ஜெய்பூா் (12 சதவீதம்), கோவை (11 சதவீதம்), குஜராத்தின் அகமதாபாத் (7 சதவீதம்) ஆகிய நகரங்களில் பணியமா்த்தல் நடவடிக்கைகள் உற்சாகமாக உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுபான்மையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் டாம்கோ கடன் திட்டத்தில் பயன்பெறலாம்

ஏப்ரலில் தங்கம் இறக்குமதி 82% அபரித வளா்ச்சி!

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.20% தோ்ச்சி: ஈரோடு மாவட்டம் முதலிடம்!

98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



