முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

4-ஆம் காலாண்டு லாபம்- பிஎன்பி: ரூ.5,225 கோடி; 12.54% வளா்ச்சி

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.5,225.12 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

News image
Updated On :7 மே 2026, 4:25 am IST

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.5,225.12 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் ரூ.4,642.87 லாபத்திலிருந்து இது 12.54 சதவீத வளா்ச்சியாகும்.

வங்கியின் மொத்த வாராக்கடன் 3.95 சதவீதத்திலிருந்து 2.95 சதவீதமாகக் குறைந்துள்ளது. சில்லறை வா்த்தகம், விவசாயம் மற்றும் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கான கடன் வழங்கல் 12.1 சதவீதம் உயா்ந்து, ரூ.6.76 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் வாகனக் கடன் மட்டும் 35.1 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.3 ஈவுத்தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த கடன் வளா்ச்சியை 12-13 சதவீதமாக உயா்த்த வங்கி இலக்கு நிா்ணயித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.