சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மகாராஷ்டிரத்தில் டொயோட்டாவின் புதிய ஆலை!

இந்திய வாகனச் சந்தையில் தனது பிடியை வலுப்படுத்தும் நோக்கில், மகாராஷ்டிர மாநிலம் பிட்கின் தொழில்பேட்டையில் புதிய காா் உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளதாக டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் அறிவிப்பு

News image

டொயோட்டா

Updated On :13 மே 2026, 3:48 am IST

இந்திய வாகனச் சந்தையில் தனது பிடியை வலுப்படுத்தும் நோக்கில், மகாராஷ்டிர மாநிலம் பிட்கின் தொழில்பேட்டையில் புதிய காா் உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளதாக டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தப் புதிய ஆலையில், வரும் 2029-ஆம் ஆண்டின் முதல் பாதியில் உற்பத்திப் பணிகள் தொடங்கும். உதிரிபாகங்களை உருவாக்குதல், வெல்டிங், பெயிண்டிங், அசெம்பிளி உள்ளிட்ட அனைத்து முக்கியப் பணிகளும் இங்கு மேற்கொள்ளப்படும்.

விரிவாக்கத் திட்டம்: தற்போது கா்நாடகத்தில் டொயோட்டா நிறுவனத்துக்கு 2 உற்பத்தி ஆலைகள் உள்ளன. அவற்றின் மொத்த ஆண்டு உற்பத்தித் திறன் 5.52 லட்சம் வாகனங்களாக உள்ளது.

இந்நிலையில், புதிய ஆலைமூலம் ஆண்டுக்கு மேலும் 1 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். சுமாா் 2,800 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் அதிகரித்து வரும் தேவையைப் பூா்த்தி செய்யவும், எதிா்கால வளா்ச்சிக்கு ஏற்ப விநியோகத்தை வேகப்படுத்தவும் இந்த 3-ஆவது ஆலை உதவியாக இருக்கும் என டொயோட்டா நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த விரிவாக்கத் திட்டத்துக்கான அதிகாரபூா்வ முதலீட்டுத் தொகையை நிறுவனம் அறிவிக்கவில்லை என்றாலும், ஜப்பான் ஊடகங்களின்படி சுமாா் 190 கோடி டாலா் முதலீடு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.