25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

8 வகைகளில் துணி துவைக்கலாம்! புதிய வாஷிங் மெஷின் அறிமுகம்!

ஹையர் நிறுவனத்தில் புதிய துணி துவைக்கும் இயந்திரம் (வாஷிங் மெஷின்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

haier washing machine

ஹையர் வாஷிங் மெஷின் - படம் / நன்றி - ஹையர்

Published On :20 மே 2026, 6:34 pm IST

ஹையர் நிறுவனத்தில் புதிய துணி துவைக்கும் இயந்திரம் (வாஷிங் மெஷின்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

துணிகளின் தரத்திற்கேற்ப 8 வகைகளில் துணிகளை துவைக்கும் புதிய வாஷிங் மெஷினில், ஆடைகளில் வீசும் துர்நாற்றத்தையும் நீக்க முடியும் என ஹையர் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹையர் நிறுவனம், இந்திய பயனர்களுக்கு ஏற்ற தயாரிப்புகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் அல்ட்ரா வாஷ் ஏர் டெக்னாலஜியுடன் கூடிய புதிய துணி துவைக்கும் இயந்திரத்தை ஹையர் அறிமுகம் செய்துள்ளது.

இதில், 8 விதமான வாஷிங் புரோகிராம்கள் இடம்பெற்றுள்ளன. இதனால், துணிகளின் தன்மை, அதிகப்படியான அழுக்கு போன்றவற்றை பொருத்து 8 வகைகளில் துணிகளை துவைக்க முடியும்.

இயந்திரத்தின் டிரம்முக்குள் ஃபில்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது, ஆடைகள் துவைக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது அழுக்குகளை உறிஞ்சி எடுக்கும் வல்லமை கொண்டது.

கடல் அலைகளைப்போன்று பலமடங்கு சுழற்சிகளை ஏற்படுத்தக்கூடியது. தண்ணீர் அளவை கண்காணிக்க முடியும் என்பதால், அதற்கேற்ப ஆடைகளை உள்ளே போட்டு துவைத்து எடுத்துக்கொள்ளலாம்.

டிரம்முக்குள் தொடர்ச்சியான நுண் அழுத்தக் காற்றை செலுத்தி ஈரப்பதம் சேர்வதை முழுவதும் தடுக்கிறது. இதில் துவைத்த ஆடைகள் 12 மணி நேரம் வரை புத்துணர்ச்சியை தக்கவைத்தபடி இருக்கும் என ஹையர் குறிப்பிடுகிறது.

இதன் கொள்ளளவு 6.5 கிலோ. கூடுதலாகத் தேவைப்படுவோருக்கு 10 கிலோ கொள்ளளவிலும் கிடைக்கிறது. விலை ரூ. 18499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Summary

haier washing machine Powerful Oceanus Wave Drum Custom Wash Cycles with 15 Mins Quick Wash

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.