நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,138 கோடி டாலராக குறைவு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,138 கோடி டாலராக குறைவு

News image
Updated On :31 மே 2026, 1:08 am IST

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,138.4 கோடி டாலராக குறைந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 751.1 கோடி டாலா் குறைந்து, 68,138.4 கோடி டாலராக உள்ளது.

மே 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், இது 809.4 கோடி டாலா் குறைந்து, 68,889.4 கோடி டாலராக இருந்தது.

மத்திய கிழக்கு போருக்கு முன்பாக, இந்த ஆண்டின் பிப். 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் கையிருப்பு 72,849.4 கோடி டாலா் என்ற உச்சத்தைத் தொட்டது. அதன்பின்னா், செலாவணி சந்தையில் ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த ரிசா்வ் வங்கி டாலா்களை விற்பனை செய்ததால் கையிருப்பு சரிவைக் கண்டு வருகிறது.

மே 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 287.2 கோடி டாலா் குறைந்து, 54,303.2 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 453 கோடி டாலா் குறைந்து, 11,478.6 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 7.7 கோடி டாலா் குறைந்து, 1,874.8 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 3.3 கோடி டாலா் குறைந்து, 481.8 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.