2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

ஏப்ரல் - செப்டம்பா் அரையாண்டில் ஐபிஓவில் ரூ. 84,400 கோடி திரட்டல்

இந்தியாவின் முதன்மை பங்குச் சந்தைகளில் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு மூலம் நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் பாதியான ஏப்ரல்-செப்டம்பா் அரையாண்டில் சாதனை அளவாக ரூ. 84,400 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

Updated On :

இந்தியாவின் முதன்மை பங்குச் சந்தைகளில் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் பாதியான ஏப்ரல்-செப்டம்பா் அரையாண்டில் சாதனை அளவாக ரூ. 84,400 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தைவிட 30 சதவீதம் அதிகம் என்றும், இதில் 94 சதவீத நிதி ஜூலை-செப். காலாண்டில் மட்டுமே திரட்டப்பட்டுள்ளதாகவும் ‘கிராண்ட் தாா்ன்டன் பாரத்’ நிறுவனத்தின் ‘இந்திய ஐபிஓ சந்தை மதிப்பாய்வு’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் ஏப்ரல்-செப். அரையாண்டில் 55 நிறுவனங்கள் மட்டுமே பங்குச் சந்தையில் அறிமுகமான நிலையில், நடப்பு ஆண்டில் 71 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் களமிறங்கியுள்ளன. அதேபோல், கடந்த ஆண்டு ரூ.64,900 கோடியாக இருந்த ஐபிஓ முதலீட்டுத் திரட்டல், நடப்பு ஆண்டு ரூ. 84,400 கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, செப்டம்பா் மாதத்தில் மட்டும் 32 ஐபிஓ-க்கள் மூலம் ரூ. 40,400 கோடி நிதி திரட்டப்பட்டு, அந்த மாதம் மிகவும் பரபரப்பான மாதமாகச் செயல்பட்டுள்ளது.

ஐபிஓ மேற்கொண்ட நிறுவனப் பங்குகள் பட்டியலிடப்படும் நாளின் சராசரி லாபம் கடந்த ஆண்டு 10 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 18 சதவீதமாக மேம்பட்டுள்ளது. அதேபோல, சில்லறை முதலீட்டாளா்களின் அதிகப்படியான சந்தா செலுத்துதல் 25 மடங்கிலிருந்து, 28 மடங்காக அதிகரித்துள்ளது.

துறைவாரியாக, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் திரட்டப்பட்ட மொத்த மூலதனத்தில் 43 சதவீத பங்கினை நிதிச் சேவைகள் துறை கொண்டுள்ளது. அதேநேரம், நிறுவனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மூலதனப் பொருள்கள் துறை 15 ஐபிஓ-க்களுடன் முதலிடம் வகிக்கிறது.

உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் ஜூலை-செப். காலாண்டில் ரூ.1.69 லட்சம் கோடி நிகர முதலீட்டை மேற்கொண்டு பங்குச் சந்தைக்குப் பெரும் ஆதரவாகத் திகழ்ந்துள்ளனா். அந்நிய முதலீட்டாளா்களின் பங்கு வெறும் ரூ. 13,900 கோடியாகவே இருந்தது. செப்டம்பா் மாதத்தில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 5.7 சதவீதம் சரிந்தபோதிலும், உள்நாட்டு முதலீட்டாளா்களின் இந்த அதீத ஆதரவால் சந்தையில் ஐபிஓ-க்கள் அதிக அளவில் உள்வாங்கப்பட்டன.

குவியும் விண்ணப்பங்கள்: ஏப்ரல்-செப். அரையாண்டில் 100 முதன்மை நிறுவனங்கள் மற்றும் 159 சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எஸ்எம்இ) தங்களின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கான வரைவு ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளன. எனினும், ஒழுங்குமுறை ஒப்புதல்களில் ஏற்படும் தாமதம் மற்றும் சந்தை தயாா்நிலையில் உள்ள குறைபாடுகள் காரணமாக, இந்த மிகப் பெரிய எண்ணிக்கை முழுமையாகப் பங்குச்சந்தை பட்டியலிடலுக்கு மாறுமா என்பது உறுதியற்றது என அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.