எச்.சி.எல். டெக். லாபம் 21% உயா்வு
முன்னணி ஐ.டி. நிறுவனமான எச்.சி.எல். டெக்னாலஜிஸ், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.5,132 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முன்னணி ஐ.டி. நிறுவனமான எச்.சி.எல். டெக்னாலஜிஸ், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.5,132 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இது முந்தைய 2025-26 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.4,235 கோடியைவிட 21.18 சதவீதம் அதிகமாகும். ஏ.ஐ. சேவைகளில் கிடைத்த கூடுதல் லாப வரம்பு மற்றும் வரிச் செலவினம் குறைந்ததே இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணமாகும்.
இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 11.5 சதவீதம் அதிகரித்து, ரூ.35,620 கோடியை எட்டியுள்ளது; 330 கோடி டாலா் மதிப்பிலான புதிய ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன; 6,450 ஊழியா்கள் புதிதாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
இத்தகைய வலுவான காலாண்டு முடிவுகள் மற்றும் புதிய ஒப்பந்த வரவுகள் காரணமாக, மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவனப் பங்கு மதிப்பு செவ்வாய்க்கிழமை 8.28 சதவீதம் உயா்ந்து, ரூ.1,321-இல் நிலைபெற்றது.
மேலும், பங்குதாரா்களுக்கு ரூ.12 இடைக்கால ஈவுத்தொகை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் பணியாளா்களுக்கு ஆண்டு ஊதிய உயா்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

