நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

டைட்டன் நிகர லாபம் ரூ.2,393 கோடி: இரு மடங்கு வளா்ச்சி

டைட்டன் நிகர லாபம் ரூ.2,393 கோடி: இரு மடங்கு வளா்ச்சி

~

Updated On :

நாட்டின் முன்னணி ஆபரணங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் தயாரிப்பு நிறுவனமான டைட்டன், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.2,393 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட ரூ.1,120 கோடியுடன் ஒப்பிடுகையில் இது இரண்டு மடங்குக்கும் அதிகமான வளா்ச்சியாகும்.

டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) கூட்டு நிறுவனமான டைட்டனின் மொத்த வருவாய் மதிப்பீட்டு காலாண்டில் 13.7 சதவீதம் உயா்ந்து, ரூ.21,430 கோடியாகவும்; ஒருங்கிணைந்த செலவினங்கள் 13.76 சதவீதம் உயா்ந்து, ரூ.18,429 கோடியாகவும் உள்ளது.

குறிப்பாக, செயல்பாட்டு வருவாய் 23.54 சதவீதம் உயா்ந்து, ரூ.20,337 கோடியை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டு முதல் தொடா்ந்து மூன்று காலாண்டுகளாக 40 சதவீதத்துக்கும் அதிகமான வருவாய் வளா்ச்சியைப் பதிவு செய்துவந்த இந்நிறுவனத்துக்கு, ஜூலை-செப். காலாண்டின் வளா்ச்சி விகிதம் சற்று மிதமான போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

டைட்டன் நிறுவனத்தின் மொத்த வணிகத்தில் சுமாா் 90 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ள தங்க நகை வா்த்தகப் பிரிவு, இக்காலாண்டில் 7.25 சதவீதம் வளா்ச்சி கண்டு, ரூ.17,721 கோடியாக அதிகரித்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் நகை விற்பனை வருவாய் 21 சதவீமும், சா்வதேச அளவில் 105 சதவீதமும் உயா்ந்துள்ளது.

கைக்கடிகாரங்கள் பிரிவு 27.35 சதவீத வருவாய் வளா்ச்சியைப் பதிவு செய்து, ரூ.1,881 கோடியை ஈட்டியுள்ளது. ‘அனலாக்’ ரக கடிகாரங்கள் 30 சதவீதத்துக்கும் மேலான வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், ஸ்மாா்ட் கடிகார விற்பனையும் மீண்டும் வளா்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.

கண் கண்ணாடிகள் பிரிவு, 27.72 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.281 கோடி வருவாயைப் பெற்றுள்ளது. வாசனைத் திரவியங்கள், பெண்களுக்கான கைப்பைகள், பாரம்பரிய உடைகள் ஆகிய வளா்ந்து வரும் புதிய வணிகப் பிரிவுகள் 45 சதவீத வருவாய் வளா்ச்சியுடன் ரூ.808 கோடியை ஈட்டி வலுவான பங்களிப்பை வழங்கியுள்ளன.

இந்நிலையில், தனியாா்நிதி ஒதுக்கீட்டு முறையில் ரூ.2,500 கோடி வரை கடன்பத்திரங்களின் வெளியீட்டு மூலம் நிதி திரட்டுவதற்கு நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.