தங்கம் விலை உயர்வு - இன்றைய விலை நிலவரம்(நவ.23)! இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்துநவி மும்பையின் துர்பே பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை?சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்! செபி தலைவர் துஹின் காந்த பாண்டே வாழ்த்து!

புதிய தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு செபி தலைவர் துஹின் காந்த பாண்டே வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

செபி தலைவர் துஹின் காந்த பாண்டே

செபி தலைவர் துஹின் காந்த பாண்டே - File photo

Updated On :

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் புதிய தேசிய வணிக நாளிதழ் தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் வெளியீட்டுக்கு செபி தலைவர் துஹின் காந்த பாண்டே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், புதிய தேசிய வணிக நாளிதழான தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) அறிமுகம் செய்திருக்கிறது.

முக்கிய செய்திகள் மற்றும் சந்தை நகர்வுகளுக்கு அப்பால் சென்று, வணிகம் மற்றும் பொருளாதாரத்தைப் பாதிக்கும் போக்குகள், முன்னேற்றங்கள் மற்றும் கருத்துகளை ஆராயும் நோக்கத்தோடு வெளியாகியிருக்கிறது தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்.

தி ஃபைனான்சியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) நாளிதழுக்கு துஹின் காந்த பாண்டே வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில்,

இந்தியாவின் நிதிச் சந்தை அளவிலும் பங்கேற்பிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்து வருவதால், நம்பகமான, பொறுப்பான நிதி சார்ந்த இதழியல் மிக முக்கியமானதாகிறது. மூலதனச் சந்தை மேம்பாடு மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பு ஆகிய நமது கூட்டுப் பயணத்தில் நிதி நாளிதழ்கள் மதிப்புமிக்க பங்களிப்பைக் கொண்டுள்ளன.

‘புராஜெக்ட் ஜாக்ருக்’ (Project Jagrook) மற்றும் அதன் ‘முதலீடு தொடர்பான எளிமையான புரிதல்’ மூலம், மக்களிடையே முதலீடு தொடர்பான பிரசாரத்தின் மூலம் செபி, தகவலறிந்த மற்றும் பொறுப்பான முதலீட்டை ஊக்குவித்து வருகிறது.

எங்களது ‘சைபர் பாதுகாப்பு’ (Cyber Suraksha) முன்னெடுப்பு இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த முயன்று வருகிறது. அதே வேளையில் ‘செபி செக்’ (Sebi Check) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட யுபிஐ முகவரிகள் (Validated UPI Handles) போன்ற நடவடிக்கைகள் முதலீட்டாளர்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

இந்த முன்னெடுப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், முதலீட்டாளர்கள் சரியான முடிவுகளை எடுக்க உதவுவதிலும் நிதி ஊடகங்கள் முக்கியப் பங்காற்ற முடியும்.

‘தி ஃபைனான்சியல் ஸ்டாண்டர்ட்’ (The Financial Standard) இதழைத் தொடங்கியுள்ள ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அது எல்லா வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன் என்று துஹின் காந்த பாண்டே குறிப்பிட்டுள்ளார்.

Summary

The Financial Standard! Congratulations from SEBI Chairperson Tuhin Kanta Pandey!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.