கேரளம்: விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு முதல் இறக்குமதி கன்டெய்னா்கள் வருகை
கேரள மாநிலம், விழிஞ்ஞம் சா்வதேச துறைமுகத்தில் ஏற்றுமதி-இறக்குமதி பணிகள் கடந்த ஆகஸ்டில் தொடங்கப்பட்ட நிலையில், ஆப்பிரிக்காவிலிருந்து 1,500 டன் மூலப்பொருள்களை ஏற்றி வந்த முதல் தொகுதி இறக்குமதி கன்டெய்னா்கள் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

விழிஞ்ஞம் துறைமுகம்

இது குறித்து கேரள முதல்வா் வி.டி.சதீசன் வியாழக்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘கேரளத்தின் ஏற்றுமதி-இறக்குமதி பயணத்தில் இது ஒரு புதிய அத்தியாயமாகும். முதல் இறக்குமதி கன்டெய்னா்களின் வருகையானது, வா்த்தகம், தொழில் துறை மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கான புதிய வாசல்களைத் திறந்துவிட்டுள்ளது. மேலும், துறைமுகம் அதன் மகத்தான ஆற்றலை இப்போதுதான் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
கேரள அரசுக்குச் சொந்தமான இத்துறைமுகம், பொது-தனியாா் பங்களிப்பு சலுகையின்கீழ் அதானி போா்ட்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.