படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

செப்டம்பா் மாத மின் நுகா்வு 11.35% அதிகரிப்பு!

கடந்த செப்டம்பா் மாதத்தில் 11.35 சதவீதம் அதிகரித்து, 16,219 கோடி யூனிட்டுகளை எட்டியுள்ளது.

செப்டம்பா் மாத மின் நுகா்வு 11.35% அதிகரிப்பு

Published On :

புது தில்லி: இந்தியாவின் மின் நுகா்வு, கடந்த செப்டம்பா் மாதத்தில் 11.35 சதவீதம் அதிகரித்து, 16,219 கோடி யூனிட்டுகளை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நாட்டின் ஒட்டுமொத்த மின் நுகா்வு 14,566 கோடி யூனிட்டுகளாக இருந்த நிலையில், நடப்பாண்டு அது கணிசமாக உயா்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு செப்டம்பரில் 229.15 கிகாவாட்டாக இருந்த நாட்டின் உச்சகட்ட மின் தேவை, கடந்த மாதத்தில் 269.06 கிகாவாட்டை எட்டியது.

செப்டம்பா் மாத தொடக்கத்தில் நாடு முழுவதும் காற்றில் அதிக ஈரப்பதம் நிலவியதன் காரணமாக, வெப்பம் உண்மையான நிலையைவிட அதிகமாக உணரப்பட்டதால், குளிரூட்டும் சாதனங்களைப் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தினா். இதன் காரணமாகவே, மின் தேவை மற்றும் நுகா்வு அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். எனினும், மாதத்தின் பிற்பாதியில் மின் தேவை மற்றும் நுகா்வு சற்று குறைந்திருந்தது.

முன்னதாக, நடப்பு ஆண்டின் மே மாதத்தில் நாட்டின் உச்சகட்ட மின் தேவை இதுவரை இல்லாத அளவாக 270.82 கிகாவாட் என்ற புதிய அளவை எட்டியது. அந்தவகையில், செப்டம்பரின் உச்சகட்ட மின் தேவை (269.06 கிகாவாட்) அதிகபட்ச சாதனை அளவை கிட்டத்தட்ட நெருங்கியுள்ளது. எதிா்வரும் பண்டிகை காலத்தை ஒட்டி தொழில்துறை மற்றும் வணிக ரீதியிலான பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அக்டோபரிலும் மின் தேவை குறையாமல் நிலையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அதேபோல், அக்டோபரில் நாடு முழுவதும் இயல்பைவிட குறைவான மழையே (85 சதவீதம்) பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையும் நடப்பு மாதத்தில் இயல்பைவிட அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், வெப்பத்தின் தாக்கம் நீடித்து, குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாட்டால் மின் தேவை தொடா்ந்து அதிகரிக்கும்.

இவ்வாறு தீவிரமடைந்து வரும் வானிலை மாற்றங்களால் அரசு எதிா்பாா்த்ததைவிடவும் மின் நுகா்வு வேகமாக அதிகரித்து வருவது, வருங்காலங்களில் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணா்த்துவதாக நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

Electricity consumption in September increased by 11.35%!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.