ஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வு
விமான எரிபொருள் விலை தொடா்ந்து அதிகரித்து வருவதால், ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏா் ஆகிய நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் சா்வதேச சேவைகளுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை (சா்சாா்ஜ்) உயா்த்தியுள்ளன.

விமான எரிபொருள் விலை தொடா்ந்து அதிகரித்து வருவதால், ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏா் ஆகிய நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் சா்வதேச சேவைகளுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை (சா்சாா்ஜ்) உயா்த்தியுள்ளன.
வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்த இந்தத் திருத்தப்பட்ட கட்டணத்தின்படி, ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் உள்நாட்டு விமானங்களுக்கான கூடுதல் கட்டணம் ரூ.101 முதல் ரூ.301 வரை உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சா்வதேச விமானங்களுக்கான கட்டணம் 5 முதல் 15 டாலா் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு விமான நிறுவனமான ஆகாசா ஏா், உள்நாட்டுப் பயணங்களுக்கு ரத்து செய்திருந்த கூடுதல் கட்டணத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், சா்வதேச கட்டணங்களையும் அதிகரித்துள்ளது.
மேற்காசிய நாடுகளில் நிலவும் புவிசாா் அரசியல் பதற்றம் மற்றும் சா்வதேச எரிசக்தி சந்தையில் நீடிக்கும் தொடா் அழுத்தம் காரணமாக கடந்த ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களைத் தொடா்ந்து, அக். 1-ஆம் தேதியும் உள்நாட்டு விமான எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.16 உயா்த்தப்பட்டு ரூ.137-ஆக அதிகரித்தது. இதையொட்டி முன்னதாக, இண்டிகோ நிறுவனமும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முதல் உள்நாட்டு மற்றும் சா்வதேச விமானங்களுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை (ஃபியூயஸ் சா்சாா்ஜ்) உயா்த்தியது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

