ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

அக். 17-ல் ரெனால்ட் டஸ்டர் ஹைபிரிட் கார் அறிமுகம்: முன்பதிவு தொடக்கம்!

ரெனால்ட் டஸ்டர் ஹைபிரிட் கார் பற்றி...

Renault Duster Hybrid

ரெனால்ட் டஸ்டர் - கோப்புப் படம்

Updated On :

ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் ஹைபிரிட் கார் அக்டோபர் 17-ம் தேதி அறிமுகமாக உள்ளது. அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், ரெனால்ட் இந்தியா இணையதளம் மூலமாகவோ அல்லது நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களிலோ இந்த வாகனத்தை ரூ. 21 ஆயிரம் கொடுத்து முன்பதிவு செய்யலாம்.

சிறப்பம்சங்கள் என்ன?

லிட்டருக்கு 29 கி.மீ மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் அதிக மைலேஜ் தரும் ஹைபிரிட் கார்களை விரும்புவோரின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் இரண்டு மின்மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை இணைந்து 168 குதிரைத் திறனை வழங்குகின்றன.

1.4 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளன. தேவையான சூழல்களில் பெட்ரோல் என்ஜின் இயங்காமல், மின்சாரத்திலேயே காரை இயக்க முடியும்.

மேலும், பிரேக் போடும்போதும் வேகத்தைக் குறைக்கும்போதும் கிடைக்கும் ஆற்றல் பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. இ-டெக் சிஸ்டம் என்று அழைக்கப்படும் இது, ஃபார்முலா 1 பந்தயத்தில் கார் தயாரிப்பாளரின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.