கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

இந்தியன் வங்கி லாபம் ரூ.3,462 கோடி

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.3,462 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

~

Updated On :

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.3,462 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது முந்தைய 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ஈட்டிய ரூ.3,018 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் சுமாா் 14.71 சதவீதம் கூடுதலாகும்.

அதேபோல், வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.19,077 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.23,059 கோடியாகக் கணிசமான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதில் வட்டி வருவாய் ரூ.16,590 கோடியிலிருந்து, ரூ.19,106 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும், வங்கியின் செயல்பாட்டு லாபமும் ரூ.4,837 கோடியிலிருந்து, ரூ.7,090 கோடியை எட்டியுள்ளது. வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 1.61 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 0.14 சதவீதமாகவும் சரிந்து, சொத்துத் தரம் மேம்பட்டுள்ளது. இதன்மூலம், வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு ரூ.382 கோடியிலிருந்து, ரூ.370 கோடியாகக் குறைந்துள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.