டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 94.92 ஆக நிறைவு!
இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்வுடன் ரூ. 94.92 என்ற அளவில் நிறைவடைந்தது.

இந்திய ரூபாய்
மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து 6 வது அமர்வாக ஏற்றத்தைச் சந்தித்து 7 காசுகள் உயர்வுடன் ரூ. 94.92 என்ற அளவில் நிறைவடைந்தது.
அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கான தேவையைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகளே இந்த உயர்வுக்குக் காரணமாக அமைந்தன.
இருப்பினும், கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருப்பதும், வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவதும் ரூபாயின் கூடுதல் ஏற்றத்தை கட்டுப்படுத்தியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 94.75 என்ற அளவில் தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 94.71 வரையிலும் பிறகு குறைந்தபட்சமாக ரூ. 95.06 வரையிலும் சென்றது. இறுதியில் அதன் முந்தைய நாள் முடிவை விட 7 காசுகள் உயர்ந்து ரூ. 94.92 ஆக நிலைபெற்றது.
நேற்று (வியாழக்கிழமை) ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ. 94.99 ஆக நிறைவடைந்தது.
Summary
The rupee stayed on upward momentum on Friday and settled 7 paise higher at 94.92.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


