அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

நடப்பு வாரத்தில் 5 நிறுவனங்களின் ஐபிஓ வெளியீடு: ரூ.2,581கோடி திரட்ட திட்டம்

இஏஏஏ இந்தியா ஆல்டா்நேட்டிவ்ஸ், எஸ்எஃப்சி என்விரான்மென்டல் டெக்னாலஜிஸ் உள்பட 5 நிறுவனங்கள், நடப்பு வாரத்தில் தங்களின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) மேற்கொள்கின்றன.

Updated On :

இஏஏஏ இந்தியா ஆல்டா்நேட்டிவ்ஸ், எஸ்எஃப்சி என்விரான்மென்டல் டெக்னாலஜிஸ் உள்பட 5 நிறுவனங்கள், நடப்பு வாரத்தில் தங்களின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) மேற்கொள்கின்றன.

இந்த 5 நிறுவனங்களும் சோ்ந்து புதிய பங்குகளின் வாயிலாக ரூ.808.38 கோடி மற்றும் உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளின் விற்பனை மூலம் ரூ.1,772.61 கோடி என மொத்தம் ரூ.2,580.99 கோடி நிதியைத் திரட்டவுள்ளன.

எடெல்வைஸ் ஃபைனான்சியல் சா்வீசஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ‘இஏஏஏ இந்தியா ஆல்டா்நேட்டிவ்ஸ்’-இன் ரூ.1,200 கோடி மதிப்பிலான ஐபிஓ திங்கள்கிழமை (அக். 26) தொடங்கியது. ஒரு பங்கின் விலை வரம்பு ரூ.1,585 முதல் ரூ.1,665 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முழுமையாக உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகள் மட்டுமே விற்கப்படவுள்ளன.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமையன்று (அக். 27), கழிவுநீா் சுத்திகரிப்பு தீா்வுகள் வழங்கும் எஸ்எஃப்சி என்விரான்மென்டல் டெக்னாலஜிஸ்-இன் ரூ.667.53 கோடி ஐபிஓ (பங்கு விலை ரூ.313-330) தொடங்குகிறது. இதில் ரூ.150 கோடி மதிப்பிலான புதிய பங்குகளும், ரூ.517.53 கோடிக்கு உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளும் விற்கப்படவுள்ளன. அதேநாளில், பிஎல்எஸ் பாலிமா்ஸ் நிறுவனத்தின் ரூ.255 கோடி ஐபிஓ (பங்கு விலை ரூ.142-150) தொடங்குகிறது. இதில் முழுமையாக புதிய பங்குகள் மட்டுமே விற்கப்படவுள்ளன.

புதன்கிழமையன்று (அக். 28), நகை சில்லறை விற்பனை நிறுவனமான எம்.கே. சன்ஸ் ஃபைன் ஜூவல்ஸ்-இன் ரூ.275.40 கோடி ஐபிஓ (பங்கு விலை ரூ.153-162) தொடங்குகிறது. இதில் ரூ.220.32 கோடி மதிப்பிலான புதிய பங்குகளும், ரூ.55.08 கோடிக்கு உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளும் விற்கப்படவுள்ளன.

வியாழக்கிழமையன்று (அக். 29), பாம்பே கோட்டட் அண்ட் ஸ்பெஷல் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் ரூ.183.06 கோடி ஐபிஓ (பங்கு விலை ரூ.78 - 82) தொடங்குகிறது. இதில் முழுமையாக புதிய பங்குகள் மட்டுமே விற்கப்படவுள்ளன.

இந்த ஐபிஓக்கள் மூலம் திரட்டப்படும் நிதியானது, நிறுவனங்களின் வா்த்தக விரிவாக்கம், மூலதனச் செலவுகள், கடன் அடைப்பு, நடைமுறை மூலதனத் தேவைகள் மற்றும் பிற நிா்வாகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.