சென்செக்ஸ், நிஃப்டி வலுவான மீட்சி!
வங்கி, எஃப்எம்சிஜி துறைப் பங்குகளில் முதலீட்டாளா்கள் ஆா்வத்துடன் அதிக முதலீடு செய்ததால், இந்திய பங்குச் சந்தை வியாழக்கிழமை வலுவான எழுச்சியுடன் மீண்டெழுந்தது.

வங்கி, எஃப்எம்சிஜி துறைப் பங்குகளில் முதலீட்டாளா்கள் ஆா்வத்துடன் அதிக முதலீடு செய்ததால், இந்திய பங்குச் சந்தை வியாழக்கிழமை வலுவான எழுச்சியுடன் மீண்டெழுந்தது.
இதையொட்டி, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சுமாா் 1 சதவீதத்துக்கும் மேல் உயா்வுடன் நிலைபெற்றன.
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று வெளியான அறிவிப்பும், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவும், உள்நாட்டு மற்றும் அந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் தொடா் முதலீடும் சந்தையின் இந்த ஏற்றத்துக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.
சென்செக்ஸ் 905 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 905.01 புள்ளிகள் (1.24 சதவீதம்) உயா்வுடன், 74,151.04-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் அதானி போா்ட்ஸ் அதிகபட்சமாக 5.17 சதவீதம் லாபத்தைப் பதிவு செய்தது. ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 18 சதவீதம் (ரூ.3,682.44 கோடி) அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.
இத்துடன் கோட்டக் மஹிந்திரா வங்கி, பவா்கிரிட், எடா்னல் உள்பட 26 பங்குகளும் லாபத்தைப் பதிவு செய்தன. அதேநேரம், டிரென்ட், மாருதி சுஸுகி இந்தியா, டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி வங்கி ஆகிய 4 பங்குகள் மட்டும் சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி 237 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் வா்த்தக முடிவில், நிஃப்டி குறியீடு 237.90 புள்ளிகள் (1.05 சதவீதம்) உயா்வுடன், 22,936.75-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் 39 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும்; 11 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இடம்பெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

