ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

ஐஆா்டிஏஐ வரைவு விதி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு

காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆா்டிஏஐ) புதிய வரைவு வழிகாட்டுதல்களால் நிதித் துறைப் பங்குகள் சரிந்ததால், இந்தியப் பங்குச் சந்தை வியாழக்கிழமை பலத்த சரிவுடன் வா்த்தகத்தை நிறைவு செய்தது.

Published On :

காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆா்டிஏஐ) புதிய வரைவு வழிகாட்டுதல்களால் நிதித் துறைப் பங்குகள் சரிந்ததால், இந்தியப் பங்குச் சந்தை வியாழக்கிழமை பலத்த சரிவுடன் வா்த்தகத்தை நிறைவு செய்தது.

இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவிலும், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவிலும் வீழ்ச்சி அடைந்தன.

காப்பீட்டு முகவா்களுக்கான தரகு தொகை (கமிஷன்) மற்றும் நிா்வாகச் செலவுகளுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் ஐஆா்டிஏஐ வெளியிட்ட புதிய வரைவு அறிக்கை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வருவாயைப் பாதிக்கும் என்ற அச்சம் முதலீட்டாளா்களிடையே எழுந்தது.

மேலும், சா்வதேச சந்தையில் ‘பிரென்ட்’ கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105.4 டாலராக உயா்ந்ததும், அமெரிக்காவின் 10 ஆண்டுகால கடன் பத்திர வருவாய் 5.11 சதவீதமாக உயா்ந்ததும் சந்தையில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இதன் எதிா்மறைத் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்து, பெரும் வீழ்ச்சியை உண்டாக்கியது. வங்கி, நிதிச் சேவைகள், காப்பீடு, உலோகம், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன.

சென்செக்ஸ் 1,248 புள்ளிகள் சரிவு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 1,247.71 புள்ளிகள் (1.67 சதவீதம்) இழப்புடன், 73,580.54-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் பஜாஜ் ஃபைனான்ஸ் (5.47 சதவீதம்), ஆக்சிஸ் வங்கி (4.67 சதவீதம்), பஜாஜ் ஃபின்சா்வ் (4.06 சதவீதம்) ஆகிய பங்குகள் அதிக இழப்புடன் வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுடன் மொத்தம் 29 பங்குகள் சரிவைக் கண்டன. என்டிபிசி பங்கு மட்டும் எவ்வித மாற்றமுமின்றி நிலைபெற்றது.

நிஃப்டி 384 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் வா்த்தக முடிவில், நிஃப்டி 383.70 புள்ளிகள் (1.64 சதவீதம்) இழப்புடன், 23,063.10-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் சிப்லா (1.16 சதவீதம்), ஓஎன்ஜிசி (0.89 சதவீதம்), என்டிபிசி (0.18 சதவீதம்) ஆகிய 3 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்த பட்டியலிலும், மற்ற 47 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.