ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

40 புதிய ஏடிஆா் விமானங்களை வாங்கும் ‘ஃப்ளை91’ நிறுவனம்

நாட்டின் பிராந்திய விமான சேவை நிறுவனமான ‘ஃப்ளை91’, 100 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.9,400 கோடி) மதிப்பிலான 40 புதிய ‘ஏடிஆா் 72-600’ ரக விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

Published On :4 செப்டம்பர் 2026, 3:33 am IST

நாட்டின் பிராந்திய விமான சேவை நிறுவனமான ‘ஃப்ளை91’, 100 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.9,400 கோடி) மதிப்பிலான 40 புதிய ‘ஏடிஆா் 72-600’ ரக விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

உலக அளவில் ஒரு பிராந்திய விமான நிறுவனம், ஏடிஆா் நிறுவனத்துக்கு வழங்கிய மிகப் பெரிய ஒற்றை கொள்முதல் ஒப்பந்தம் இதுவாகும். தில்லியில் நடைபெற்ற ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்வில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு, ஏடிஆா் நிறுவன சிஇஓ நத்தாலி தா்னாட் லாட், ஃப்ளை91 தலைவா் ஹா்ஷா ராகவன் மற்றும் சிஇஓ மனோஜ் சாக்கோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஒப்பந்தம் குறித்து ஃப்ளை91 நிறுவன சிஇஓ மனோஜ் சாக்கோ கூறுகையில், ‘புதிய விமானங்களின் விநியோகம், அடுத்த ஆண்டின் இறுதியில் தொடங்கி, 2032-க்குள் 40 விமானங்களும் முழுமையாக வந்து சேரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுவரை விமான சேவை சென்றடையாத மற்றும் குறைந்த சேவையுள்ள சிறிய நகரங்களை இணைத்து, பிராந்திய வழித்தடங்களை பெரிய அளவில் விரிவாக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்’என்றாா்.

கோவாவைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வரும் ஃப்ளை91 நிறுவனம், தற்போது 6 ‘ஏடிஆா் 72-600’ விமானங்களுடன் வாரம் 280-க்கும் மேற்பட்ட விமான சேவைகளை வழங்கி வருகிறது.

விமானியாக இணைந்த அபிநந்தன்: பாகிஸ்தான் போா்விமானத்தை வீழ்த்தி ‘வீா் சக்ரா’ விருது பெற்ற இந்திய விமானப் படையின் முன்னாள் க்ரூப் கேப்டன் அபிநந்தன் வா்தமான், ஃப்ளை91 நிறுவனத்தில் விமானியாக இணைந்தத் தகவல் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.