
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்திவைப்பு!
புதுதில்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சிமாநாடு காரணமாக, செப்டம்பர் 12 அன்று நடைபெறவிருந்த 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி
புதுதில்லி: புதுதில்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சிமாநாடு காரணமாக, செப்டம்பர் 12 அன்று நடைபெறவிருந்த 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநில நிதியமைச்சர்களை உள்ளடக்கிய இந்தக் கவுன்சில் கூட்டம், கடந்த ஆண்டு நடைபெற்றது.
இந்த நிலையில், பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு, 57 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அக்டோபர் 7 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முந்தைய 56 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 3 மற்றும் செப்டம்பர் 4, 2025 அன்று நடைபெற்றது. அப்போது, சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் மற்றும் வரி வரம்பு குறித்த மறுசீரமைப்பை மேற்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்தன.
அக்டோபர் 7, 2026 அன்று நடைபெறவுள்ள 57 வது கூட்டத்தில், மாதத்திற்கு ரூ. 2.5 லட்சத்திற்கும் அதிகமான பரிமாற்றம் செய்யும் வணிகங்களுக்கான ஜிஎஸ்டி பதிவு நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து கவுன்சில் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜிஎஸ்டி பதிவை ரத்து செய்வதில் தானியங்கி முறை மற்றும் பிற மாற்றங்கள் குறித்தும் கவுன்சில் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
The GST Council meeting, has been postponed to October 7 on account of the BRICS summit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







