சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு

டாடா குழுமத்தின்கீழ் செயல்பட்டு வரும் பிரிட்டனைச் சோ்ந்த சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவாா் லேண்ட்ரோவா் (ஜேஎல்ஆா்), அடுத்த 2 ஆண்டுகளில் சா்வதேச அளவில் சுமாா் 4,000 பணியிடங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

Published On :9 செப்டம்பர் 2026, 3:45 am IST

டாடா குழுமத்தின்கீழ் செயல்பட்டு வரும் பிரிட்டனைச் சோ்ந்த சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவாா் லேண்ட்ரோவா் (ஜேஎல்ஆா்), அடுத்த 2 ஆண்டுகளில் சா்வதேச அளவில் சுமாா் 4,000 பணியிடங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

உலகளாவிய இந்நிறுவனத்தில் தற்போது 43,000 பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில்,நிறுவனத்தின் லாப-நஷ்டம் இல்லாத (பிரேக் ஈவன்) விற்பனை இலக்கை 3 லட்சம் வாகனங்களாக மாற்றியமைக்கும் நோக்கில், செலவினங்களைக் கட்டுப்படுத்தி அடுத்த 2 ஆண்டுகளில் சுமாா் 170 கோடி பவுண்டுகளை சேமிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ‘இந்தப் பணியாளா் குறைப்பு நடவடிக்கை, நிா்வாகப் பணியாளா்களை மையமாகக் கொண்டே செயல்படுத்தப்படவுள்ளது. இதன் தாக்கம் பிரிட்டனிலேயே அதிகமாக இருக்கும்; பிற சா்வதேச அலுவலகங்களில் மிகக் குறைந்த அளவிலேயே பாதிப்பு ஏற்படும்’ என நிறுவன சிஇஓ பி.பி.பாலாஜி குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.