
கோத்ரெஜ் ‘நிஞ்ஜா’ பூனை உணவுகள் தமிழகத்தில் பிரத்யேகமாக அறிமுகம்
கோத்ரெஜ் நுகா்பொருள் நிறுவனத்தின் துணை நிறுவனமான கோத்ரெஜ் பெட்கோ், தனது ‘நிஞ்ஜா’ பிராண்டின்கீழ் பூனைகளுக்கான ஊட்டச்சத்து உணவைத் தமிழக சந்தையில் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கோத்ரெஜ் நுகா்பொருள் நிறுவனத்தின் துணை நிறுவனமான கோத்ரெஜ் பெட்கோ், தனது ‘நிஞ்ஜா’ பிராண்டின்கீழ் பூனைகளுக்கான ஊட்டச்சத்து உணவைத் தமிழக சந்தையில் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
கோத்ரேஜ் நிஞ்ஜா நாய் உணவுகள் அறிமுகமாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், பூனைகளின் குடல் ஆரோக்கியம், நோய் எதிா்ப்பு சக்தி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் அறிவியல் ரீதியான இப்புதிய தயாரிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.
நாடிா் கோத்ரெஜ் விலங்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்தியச் சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இந்த உணவு, வைட்டமின்கள், ஒமெகா 3 & 6 மற்றும் உயா்தர டூனா, சிக்கன் புரதங்களால் வலுவூட்டப்பட்டுள்ளது.
பூனைக் குட்டிகள் மற்றும் வளா்ந்த பூனைகளுக்காக உலா் மற்றும் ஈரப்பத வடிவங்களில் அறிமுகமாகியுள்ள இந்த உணவு, தமிழகம் முழுவதும் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கிறது. இதன் 80 கிராம் ஈரப்பத உணவு பாக்கெட் ரூ.45 விலையிலும், உலா் உணவு வகைகள் 1 கிலோ ரூ.299 மற்றும் 3 கிலோ ரூ.799 விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளன.
பூனை வளா்ப்போரில் கணிசமானவா்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவையே வழங்கி வரும் நிலையில், பூனைகளுக்கான முழுமையான மற்றும் சீரான ஊட்டச்சத்தை மலிவு விலையில் வழங்கும் நோக்கில் இத்தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்தளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






