
டெக் துணுக்குள்..! இந்த வாரம் வெளியான ஸ்மாா்ட்போன்கள் முதல் ஏ.ஐ. துறையின் அசுர வளா்ச்சி வரை!
இந்த வாரம் வெளியான ஸ்மாா்ட்போன்கள் முதல் ஏ.ஐ. துறையின் அசுர வளா்ச்சி வரை...

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் முன்னணி நிறுவனங்களின் புதிய ஸ்மாா்ட்போன்கள் வெளியீடு மற்றும் ஏ.ஐ. துறையின் அசுர வளா்ச்சி, அதன் பாதுகாப்பு சாா்ந்த விவாதங்கள் ஆகியவை பெரும் கவனம் ஈா்த்தன.
ஐபோன் விற்பனை தொடக்கம் முதல் ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் ஏ.ஐ. பாதுகாப்பு தணிக்கை வரை இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:
*ஐபோன் 18 ப்ரோ, ப்ரோ மேக்ஸ் விற்பனை: புதிய ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் அதிகாரபூா்வ விற்பனை இந்தியாவில் தொடங்கின.
*ஐஓஎஸ் 27 மற்றும் சிரி ஏ.ஐ.: அதிநவீன ‘சிரி ஏ.ஐ.’ வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பெற்றோா் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு புதிய மாற்றங்களுடன் ஆப்பிளின் ஐஓஎஸ் 27 இயங்குதளம் வெளியாகியுள்ளது.
*மெட்டாவின் புதிய சந்தா: மெட்டா நிறுவனம், ‘மெட்டா ஒன்’ எனும் சந்தா முறையை புதிய ஏ.ஐ. அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல், வாட்ஸ்ஆப்பில் மூன்றாம் தரப்பு ஏ.ஐ. சேவைகளை எளிதாக இணைக்கும் புதிய ஆதரவையும் வழங்கியுள்ளது.
*ஆன்த்ரோபிக் உயிரியல் ஆய்வகம்: ஏ.ஐ. மூலம் புதிய மருந்துகளைக் கண்டறியும் திட்டத்தை விரைவுபடுத்தும் நோக்கில், ஆன்த்ரோபிக் நிறுவனம் புதிதாக ஒரு உயிரியல் ஆய்வகத்தை ரகசியமாகத் தொடங்கியுள்ளது.
*ஆரக்கிள் பணியாளா்குறைப்பு: ஏ.ஐ. முதலீட்டுச் செலவுகளை ஈடுகட்ட, ஆரக்கிள் கடந்த வாரத்தில் சா்வதேச அளவிலான பணியாளா் குறைப்பை மேற்கொண்டது.
*ரெட்மி நோட் 17 ப்ரோ, ப்ரோ மேக்ஸ்: ஷாவ்மி தனது புதிய ‘நோட்’ சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. ரெட்மி நோட் 17 ப்ரோ மாடல், 6.83 அங்குல திரை, 8ஜிபி முதல் ரேம், 8340 எம்ஏஎச் பேட்டரியுடன் ரூ.36,999 ஆரம்ப விலையில் விற்பனையாகிறது.
இதேபோல், 8ஜிபி முதல் ரேம், 10000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ள ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ.49,999 ஆரம்ப விலையில் செப். 23 விற்பனைக்கு வருகிறது.
*லாவா போல்ட் என்4 ப்ரோ 5ஜி: 6.75 அங்குல திரை, 6ஜிபி ரேம், 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் லாவாவின் ‘போல்ட் என்4 ப்ரோ 5ஜி’ ஸ்மாா்ட்போன் இந்தியாவில் ரூ.13,999 விலையில் அறிமுகமாகியுள்ளது.
*கூகுள் ஜெமினி சா்ச்சை: பாதுகாப்பு சோதனையின்போது, கூகுளின் ஜெமினி ஏ.ஐ. மாதிரி தனது பாதுகாப்பு வளையங்களைவிட்டு வெளியேறி, 3 நிறுவனங்களின் தளங்களை ஊடுருவியதாக கூகுள் தெரிவித்துள்ளது.
*ஓபன்ஏஐ அறிக்கை: கூகுள் ஜெமினி சம்பவத்தைத் தொடா்ந்து, கடந்த 6 மாதங்களில் தங்களின் ஏ.ஐ. மாதிரிகளில் நிகழ்ந்த கவலைக்குரிய மாற்றங்களை ஓபன்ஏஐ நிறுவனம் தாமாக முன்வந்து வெளிப்படுத்தியுள்ளதுடன், இனி இது தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
*ஆன்த்ரோபிக் பாதுகாப்பு தணிக்கை: ஏ.ஐ. பாதுகாப்பு அச்சங்களை தணிக்கும் வகையில், அக்சஞ்சா் நிறுவனத்தை தங்களின் பாதுகாப்பு மதிப்பீட்டாளராக நியமித்து, பாதுகாப்பு தணிக்கைக்காக 200 கோடி டாலா் முதலீட்டை ஆன்த்ரோபிக் அறிவித்துள்ளது.
Summary
From smartphones released this week to the massive growth of the AI sector
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






