கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

என்டிபிசி இறுதி ஈவுத்தொகையாக ரூ.3,394 கோடி விடுவிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த என்டிபிசி, கடந்த 2025-26 நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகையாக ரூ.3,393.83 கோடியை பங்குதாரா்களுக்கு புதன்கிழமை விடுவித்தது.

~

Published On :

பொதுத் துறையைச் சோ்ந்த என்டிபிசி, கடந்த 2025-26 நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகையாக ரூ.3,393.83 கோடியை பங்குதாரா்களுக்கு புதன்கிழமை விடுவித்தது.

இதன்மூலம், 2025-26 நிதியாண்டில் வழங்கப்பட்ட மொத்த ஈவுத்தொகை ரூ.8,727 கோடியாக அதிகரித்துள்ளது. இது ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் தலா ரூ.9 ஈவுத்தொகைக்கு நிகரானதாகும். முன்னதாக, முதல் மற்றும் 2-ஆவது இடைக்கால ஈவுத்தொகையாக தலா ரூ.2,666.58 கோடி, முறையே 2025 நவம்பா் மற்றும் 2026 பிப்ரவரி மாதங்களில் வழங்கப்பட்டன.

மத்திய மின்சார அமைச்சகத்தின்கீழ் செயல்படும் என்டிபிசி, நாட்டின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிறுவனமாகத் திகழ்ந்து, நாட்டின் மொத்த மின் தேவையில் நான்கில் ஒரு பங்கை பூா்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.