தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்திய சுற்றுலா அமைச்சம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து போகும் மாநிலம் தமிழ்நாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து போகும் சுற்றுலா தலமாக கோவா, கேரளா, மற்றும் ஜம்மு காஷ்மீர் என்று பொதுவாக கருதப்பட்டாலும், இந்திய சுற்றுலா அமைச்சம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து போகும் மாநிலம் தமிழ்நாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் 20 சதவீதம் பேர் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு தமிழகம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்த போதும் சுற்றுலா பயணிகளின் வரத்து இங்கு அதிகமாகவே இருந்தது என தெரியவந்துள்ளது. 2015ம் ஆண்டில் இந்தியாவிற்கு 23 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
இது 2014ம் ஆன் ஆண்டுடன் ஒப்பிடும் போது 4.4 சதவீதம் அதிகம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து போன மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்திற்கு 4.68 மில்லியன் சுற்றுலா பயணிகளும், மகாராஷ்டிராவில், 4.41 மில்லியன், உத்தரப் பிரதேசத்தில், 3.1 மில்லியன், தில்லியில். 2.38 மில்லியன், மேற்கு வங்கத்தில் 1.49, ராஜஸ்தான், 1.48 கேரளா 0.98 மில்லியன், கர்நாடகா, 0.64, மற்றும் கோவாவில் 0.54 மில்லியன் சுற்றுலா பயணிகளும் வந்து போயுள்ளனர்.
மகாராராஷ்டிராவில் சுற்றுலா பயணிகளின் வருகை 18.9 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 13.3 சதவீதமும், தில்லியில், 10.2 சதவீதமும், சுற்றுலா பயணிகளின் வருகை இருந்தது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்ல வசதியான மாநிலமாக பீகார், அரியானா, குஜராத், கேரளா, புதுச்சேரி மற்றும் தெலுங்கானா உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...