கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

சுற்றுலா தொழில் துறையில் சிறப்பான சேவை செய்த 112 பேருக்கு விருது

சென்னையில் சுற்றுலா தொழில் துறையில் பயணிகளுக்கு சிறப்பான சேவை வழங்கி வரும் 112 பேரைப் பாராட்டி தமிழ்நாடு சுற்றுலா விருது, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சுற்றுலா விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வி.ஜி.பி. குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோஷத்துக்கு வழங்குகிறார் திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ்.

Published On :

சென்னையில் சுற்றுலா தொழில் துறையில் பயணிகளுக்கு சிறப்பான சேவை வழங்கி வரும் 112 பேரைப் பாராட்டி தமிழ்நாடு சுற்றுலா விருது, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மத்திய, மாநில சுற்றுலா துறை மற்றும் மதுரா வெல்கம் முதல் சுற்றுலா இதழ் இணைந்து 2-ஆவது ஆண்டாக 2016-ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருது வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மத்திய தென்மண்டல சுற்றுலாத்துறை இயக்குநர் ஸ்ரீவர்தன் சஞ்சய் தலைமை வகித்தார். மத்திய வடமண்டல சுற்றுலாத்துறை இயக்குநர் சோயப் சமது முன்னிலை வகித்தார்.
நடிகை பூர்ணிமா பாக்யராஜ் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் பங்கேற்று சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்ட விமான நிறுவனம், நட்சத்திர ஹோட்டல்கள், பயண ஏற்பாட்டாளர்கள் என சுற்றுலாத் தொழில் சார்ந்தவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
வடசென்னையில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவச் சேவை அளித்து வரும் டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு மாமனிதர் விருது, ரூ.1 லட்சத்துக்கான காசோலை, தொழிலதிபர் வி.ஜி.பி.சந்தோஷத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது என மொத்தம் 112 பேருக்கு விருது வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சுற்றுலா விருது வழங்கும் குழுத் தலைவர் வி.கே.டி.பாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.