பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

டாவோஸ் பொருளாதார உச்சி மாநாட்டில் ஆயுதங்கள் கேட்கும் உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி டாவோஸ் பொருளாதார உச்சி மாநாட்டில் இன்று (திங்கள்கிழமை)  கலந்து கொண்டு உக்ரைனுக்கு அதிக ஆயதங்கள் வழங்குமாறும், ரஷியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

News image
கோப்புப்படம்
Updated On :23 மே 2022, 12:44 pm

DIN

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, டாவோஸ் பொருளாதார உச்சி மாநாட்டில் இன்று (திங்கள்கிழமை)  கலந்து கொண்டு உக்ரைனுக்கு அதிக ஆயதங்கள் வழங்குமாறும், ரஷியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

காணொளி வாயிலாக பேசிய அதிபர் ஸெலென்ஸ்கி கூறியதாவது, “ கீவ் ரஷியாவினால் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கப்படும் போது  உரிய நேரத்தில் ஆயதங்களைப் பெற்றிருந்தால் ஆயிரக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.  அதன் காரணத்தினால் தான் உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதே போல ரஷியாவிலிருந்து பெறப்படும் எரிபொருள்கள் மற்றும் அதன் வங்கிகளுக்கும் தடை விதிக்க வேண்டும். ரஷியாவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற வேண்டும். மேலும், உலக நாடுகள் ரஷியாவுடன் எந்த விதமான வர்த்தகமும் மேற்கொள்ளக் கூடாது” என்றார்.

டாவோஸ் பொருளாதார உச்சி மாநாட்டில் ரஷியா-உக்ரைன் போர் தொடர்பான விஷயங்கள் அதிக அளவில் கலந்தாலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.