காசு போடுங்க கமல்..!

நாங்கள் சென்னைக்கு புறப்பட்டு வரும் போது, "ஏம்ப்பா... சென்னைக்குப் போய் என்னய்யா பண்ணப்போறீங்க.." என்று கேட்டார் அம்மா. "நாங்க டிராமாவுக்கு மியூசிக் போடுவோம். லைட் மியூசிக் பண்ணுவோம்.." என்றேன்.
காசு போடுங்க கமல்..!
Published on
Updated on
1 min read


நாங்கள் சென்னைக்கு புறப்பட்டு வரும் போது, "ஏம்ப்பா... சென்னைக்குப் போய் என்னய்யா பண்ணப்போறீங்க.." என்று கேட்டார் அம்மா. "நாங்க டிராமாவுக்கு மியூசிக் போடுவோம். லைட் மியூசிக் பண்ணுவோம்.." என்றேன்.

"ஒண்ணுமே கிடைக்கலன்னா என்ன பண்ணுவீங்க.." அடுத்த கேள்வி கேட்டார். "ஒண்ணுமே இல்லைன்னா... ப்ளாட்பார்ம்ல உட்கார்ந்து வாசிப்போம்.. " என்றேன். "என்னப்பா... இப்படி சொல்றீங்க..?"

"ஆமாம்மா... மேடை என்பதே ப்ளாட்பார்ம்தான்.. கம்யூனிஸ்ட் கட்சி மேடை கூட ப்ளாட்பார்ம்தான்.. எங்கே வாசித்தாலும் மக்கள் வரத்தான் போறாங்க.." என்றேன்.


"என்னமோ சொல்றீங்கப்பா.. எனக்கு ஒண்ணும் புரியலை.." என்றார் அம்மா.

அன்னக்கிளி வாய்ப்பு வந்தது. இசையமைப்பாளராக வெற்றிபெற்றாயிற்று. அடுத்தடுத்தப் படங்களில் வாய்ப்பு. ஆனால், அம்மாவிடம் விளையாட்டாகச் சொன்னதைச் செய்து பார்த்தால் என்ன? ஒரு நாள் ஆர்மோனியம், தபேலாவுடன் பீச்சுக்குப் போனோம். பீச்சில் வாசிக்கிற மாதிரி வரிசையாகப் படம் எடுத்துக் கொண்டு வருகிறோம். அப்போது அந்தப் பக்கம் 'சிகப்பு ரோஜாக்கள்' படப்பிடிப்பு நடக்கிறது. இந்தப் படத்துக்கு முன்னாடி நான், பாஸ்கர், அமர் மூன்று பேரும் அங்கே இருந்த ப்ளாட்பாரத்தில் உட்கார்ந்து வாசிக்க ஆரம்பித்து விட்டோம். வாசித்துக் கொண்டிருப்பதை கமல் பார்த்து எங்களிடம் வந்தார்.

"கொஞ்சம் பொறுங்க.. ஏதாவது துண்டு போடுங்க.." என்றார். அங்கிருந்த ஒருவர் படப்பிடிப்பில் இருந்த விரிப்பு ஒன்றை கொண்டு வந்து விரித்தார். "துண்டு மட்டும் போதுமா.. காசு போடுங்க.." என்றோம். படப்பிடிப்பில் இருந்தவர்கள் எல்லோரும் காசு போட அந்த இடமே கலகலகப்பானது.

- இளையராஜா
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com