
நேரு இறந்த சமயத்தில், அவருக்கு இரங்கல் பாடல் ஒன்றை எழுதியிருந்தார் கவியரசர். அப்போது நாங்கள் நடத்துவதாக இருந்த கச்சேரியை ரத்து செய்து விடலாம் என எண்ணியிருந்தோம்.
இருந்தாலும் நேருவுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் பாடல் பாடலாம் என எங்கள் முடிவை மாற்றினோம்.
அப்போது கவியரசர் எழுதிய இரங்கல் பாடலை வைத்து விளையாட்டாக இசையத்துக் கொண்டிருந்தேன். அது எப்படியோ அண்ணனின் காதுகளில் விழுந்திருக்கிறது.
அன்று மாலை அந்த இரங்கல் தெரிவிக்கும் பாடலைப் பாடுவதற்காக மேடையில் அமர்ந்திருந்தபோது, அண்ணன் அந்தப் பாடலைப் பாடச் சொல்லி எனக்கு உத்தரவிட்டார்.
அதுதான் நான் முதன்முதலில் கம்போஸ் செய்த பாடல். என் இசைப் பயணத்தைத் தொடங்கிவைத்தவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள்தான்.
- இளையராஜா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.