
இதுவரை நீங்கள் இசை அமைத்த பாடல்களில் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாத பாடல் எது? கல்லூரி விழா ஒன்றில் மாணவர் ஒருவர் முன் வைத்த கேள்வி இது..
"இதுவரை நான் இசையமைத்ததில் எந்தப் பாடலுமே நான் எதிர்பார்த்தபடி அமைந்ததில்லை. ஒவ்வொரு பாடலிலும் எங்கேயாவது தவறு இருக்கும்.
இசையில் அனைத்துச் செல்வங்களும் இருக்கின்றன. அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இசைக்கு வெற்றி, தோல்வி எதுவுமே கிடையாது. வெற்றி, தோல்வி என்பதை மாணவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. மற்றவர்களுக்குத்தான் நான் இசைஞானி. எனக்கு நான் இன்னமும் இசைஞானி இல்லை. சொல்லப் போனால் எனக்கு நானே இளையராஜாவே இல்லை."
- இளையராஜா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.