நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

14. ஸ்வீட் எடு, கொண்டாடு! - 5

எல்லா மனிதர்களுக்கும்கூடத்தான் இரண்டு கண்கள், ஒரு மூக்கு, அதற்குள் இரண்டு ஓட்டைகள், இரண்டு கைகள், இரண்டு கால்கள், பத்து விரல்கள் என ஒரே மாதிரியான அமைப்பு உள்ளது. எல்லா மனிதர்களுமே கோடிக்கணக்கான உயிரணுக்களால் ஆனவர்கள்தான். அதற்காக நானும் நீங்களும் ஒன்றுதான் என்று சொல்லிவிட முடியுமா?

News image
Updated On :20 ஜூன் 2016, 5:36 am

நாகூர் ரூமி

டயாபடீஸ் என்பது நோயே அல்ல… பரம்பரை நோயும் அல்ல.

- டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான்

இந்தப் பகுதிக்குள் செல்வதற்கு முன் இதுவரை சொன்னதை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வது நல்லது. அதோடு டயாபடீஸ் எனப்படும் பிரச்னைக்கு அலோபதி வைத்தியம் செய்துகொள்வதால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்க வேண்டியதும் அவசியமாகிறது.

திரும்பத்திரும்ப சொல்லப்படும் பொய்கள்

1. டயாபடீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோய் என்பது ஒரு பயங்கரமான நோய்.

2. இது வந்தால் குணப்படுத்தவே முடியாது.

3. உணவுக் கட்டுப்பாடு, மருந்து மாத்திரைகள், இன்சுலின் ஊசிகள் மூலம் இதை வாழ்நாள் முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

4. இதன் உப விளைவுகளாக ஏற்படும் அசதி, மயக்கம், உயர் ரத்த அழுத்தம், உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் நடைபெறாமல் விரல்கள், கை, கால் போன்றவற்றை வெட்டி எடுத்தல், கண் பார்வை இழத்தல், மாரடைப்பு முதலான பிரச்னைகள் வருவதைத் தடுக்க முடியாது.

5. வாழ்நாள் முழுவதும் டயாபடீஸ் நோயாளியாக இருந்துதான் போக வேண்டும்.

சொல்லப்படாத உண்மைகள்

1. ஆங்கில மருத்துவம் தனது தவறான நோயறிதல்களில் (wrong diagnosis) ஒன்றுக்கு வைத்த பெயர்தான் டயாபடீஸ் என்ற பெயரில் செய்யப்படும் அச்சுறுத்தலாகும்.

2. தரம் குறைந்த, எதற்குமே பயனற்ற க்ளுக்கோஸை சிறுநீரகம் வெளியேற்றுகிறது. சிறுநீர்ப் பரிசோதனை மூலம் இது கண்டறியப்பட்டு, அந்தக் கழிவு வெளியேற்றம் ஆங்கில மருத்துவத்தால் நோயாகப் புரிந்துகொள்ளப்பட்டு, மருந்து, மாத்திரைகள், ஊசிகள் மூலம் அது கட்டுப்படுத்தப்பட முயற்சி எடுக்கப்படுகிறது.

3. எதற்கும் உபயோகமற்ற கழிவு என்பதால் உடலால் வெளியேற்றப்பட்ட தரமற்ற க்ளுக்கோஸை மீண்டும் உடலின் கோடிக்கணக்கான செல்களுக்குள் வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது அலோபதி மருத்துவ வைத்தியம். முக்கியமாக, இன்சுலின் ஊசிகள் மூலம்.

4. வைத்தியம் என்ற பெயரில் ஆங்கில மருத்துவத்தால் செய்யப்படும் ஒவ்வொரு காரியமும் உடலின் ‘ஒவ்வொரு பாகத்தையும், உறுப்பையும், செல் அணுவையும் விஷத்தன்மைக்கு உள்ளாக்குகிறது’.

5. விஷத்தன்மை கொண்ட க்ளுக்கோஸ் உடலில் ஒவ்வொரு உயிரணுக்குள்ளும் ஊடுறுவும்போது ‘கெட்ட சக்தியை வெளிப்படுத்துகிறது’.

6. இதனால் பசியின்மை ஏற்படுகிறது. ‘லிவர்’ எனப்படும் கல்லீரல் செயலிழப்பதால் ஏற்படும் விளைவே பசியின்மையாகும். இதனால் திடீர் அசதி ஏற்பட்டு, மயக்க நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.

7. கல்லீரல் அசதியுறும்போது உடலின் ஒவ்வொரு உயிரணுவும் அசதியுறும். இந்த நிலையில் ஹீலர் பாஸ்கர் மிகச்சரியாக வர்ணித்த ‘கெட்ட க்ளுக்கோஸ்’ ஏற்கெனவே ஒவ்வொரு உயிரணுவுக்குள்ளும் திணிக்கப்பட்டிருப்பதால், உறுப்புகள் அனைத்தும் பாழாகத் தொடங்கும்.

8. இன்சுலின் போட்டுக்கொண்டதால் ரத்த நாளங்களுக்குள்ளும் கெட்ட க்ளுக்கோஸ் திணிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, ரத்த நாளங்கள் சேதமடைந்து, வீக்கமும், அயர்ச்சியும், ஏற்பட்டு, எந்த நேரத்திலும் பிளவு கண்டு நாளங்கள் வெடித்துவிடலாம்.

9. ‘ரத்த நாளங்களில் அடைப்பையும், ரத்த ஓட்டத்தில் தடையையும் ஏற்படுத்திவிடலாம்’. இதனால்தான், ஆங்கில மருத்துவத்தை ‘சின்சிய’ராகவும் ‘சீரியஸாக’வும் எடுத்துக்கொண்ட பலர், சில ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் விரல்களை, கை, கால்களை இழக்க நேரிடுகிறது.

10. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையின் காரணமாக கை, கால்களில் மதமதப்பும், எரிச்சலும், புண்களும் ஏற்படும். ரத்த நாளங்களில் ஏற்படும் வெடிப்பால் கண் பார்வை போகலாம்.

11. மூட்டுகள், முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றில் தேய்வு ஏற்பட்டு, இடுப்புக்குக் கீழே கால்கள் செயலிழக்கும் அபாயமும் உண்டு.

12. கை, கால் உணர்விழப்பு, பக்கவாதம், மாரடைப்பு, திடீர் இறப்பு – இப்படி எதுவேண்டுமானாலும் இதனால் நடக்கலாம்.

இவைகளெல்லாம் டயாபடீஸ் என்ற பிரச்னைக்குத் தொடர்ந்து அலோபதி முறையில் வைத்தியம் பார்ப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளாகும்! ஆங்கில மருத்துத்தை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இவ்விதமான பக்க விளைவுகள் ஏற்படுவது நிச்சயம். இவை உண்மையில் பக்க விளைவுகள் அல்ல, ‘பக்கா’ விளைவுகள் என்கிறார் ஹீலர் உமர்! சந்தம் விளையாடும் சொற்களில் சத்தியமும் சேர்ந்து சிரிக்கிறது!

‘‘அடிப்படையான ஜீரண உறுப்புகளில் எந்த உறுப்பு பாதிப்படைந்தாலும், அவற்றின் கூட்டான ஜீரணத்தின் தரம் குறைந்துவிடுகிறது. அதன் விளைவாகக் கிடைக்கப்பெறும் க்ளுக்கோஸும் தரம் குறைந்தே ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. உடலானது தரம் குறைந்த க்ளுக்கோஸை நிராகரிக்கிறது. நாம் மிகத்தெளிவாக நம் மனத்தில் நிலைநிறுத்த வேண்டிய விஷயங்கள் இரண்டுதான் -

1. தரம் மிக்க க்ளுக்கோஸ் உடலால் உபயோகப்படுத்தப்படுகிறது. சிறுநீரகம் ஒருபோதும் அதை வெளியேற்றாது.

2. தரம் குறைந்த க்ளுக்கோஸ் உடலால் நிராகரிக்கப்படுகிறது. அது உடலிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டிய கழிவுப் பொருளாகும்.

Insulin, Sulfonylureas, Biguanides (Glibenclamide, Met, Formin) போன்ற ஆங்கில மருந்துகள், கழிவுப்பொருளான க்ளுக்கோஸைத்தான் உடலுக்குள் செலுத்த முயற்சிக்கின்றன’’.

சுருக்கமாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், தரம் வாய்ந்த க்ளுக்கோஸ் கிடைத்தால் உடல் ஏற்றுக்கொள்ளும். தரமான க்ளுக்கோஸ் முறையான ஜீரணத்தின் மூலமே கிடைக்கும். அப்போதுதான் கணையம், இன்சுலின் ஹார்மோனைச் சுரக்கும். ஜீரண உறுப்புகளின் பாதிப்பின் காரணமாக, அல்லது முறையற்ற ஜீரணத்தின் காரணமாக தரமற்ற, கெட்ட க்ளுக்கோஸ் உருவாகும்போது, அதை உயிரணுக்களுக்குள் செல்ல அனுமதிக்கும் ‘பாஸ்போர்ட்’டான இன்சுலினை கணையம் சுரக்காது! ‘பாஸ்போர்ட்’ இல்லாமல் ‘செல்’ நாடுகளுக்குள் செல்ல முடியாமல் அகதிகளாகச் சுற்றிக்கொண்டிருக்கும் கெட்டவர்கள்தான் சிறுநீர் மூலமாக வெளியேற்றப்படுகிறார்கள்!

நல்லதும் கெட்டதும்

நாம் மேலே விளங்கிக்கொண்ட நல்ல க்ளுக்கோஸ், கெட்ட க்ளுக்கோஸ் என்ற வாதத்தை ஆங்கில மருத்துவம் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு அது சொல்லும் காரணம், இரண்டு க்ளுக்கோஸ்களுமே ஒரே மாதிரியான ரசாயனப் பொருள்களால் ஆனவைதான். எல்லா க்ளுக்கோஸின் கெமிக்கல் அமைப்பும் C6H12O6 என்பதுதான். அதாவது, ஆறு மடங்கு கார்பன், பன்னிரண்டு மடங்கு ஹைட்ரஜன், ஆறு மடங்கு ஆக்ஸிஜன். தண்ணீருக்கு H2O என்பதுபோல. எனவே, இதில் நல்லது கெட்டது என்பது எங்கிருந்து வருகிறது என்று கேட்கிறது ஆங்கில மருத்துவம்.

இது சரியான வாதமல்ல. எல்லா மனிதர்களுக்கும்கூடத்தான் இரண்டு கண்கள், ஒரு மூக்கு, அதற்குள் இரண்டு ஓட்டைகள், இரண்டு கைகள், இரண்டு கால்கள், பத்து விரல்கள் என ஒரே மாதிரியான அமைப்பு உள்ளது. எல்லா மனிதர்களுமே கோடிக்கணக்கான உயிரணுக்களால் ஆனவர்கள்தான். அதற்காக நானும் நீங்களும் ஒன்றுதான் என்று சொல்லிவிட முடியுமா? நான் முட்டாளாகவும் நீங்கள் அறிவாளியாகவும் இருக்கும் சாத்தியம் உண்டா இல்லையா? ஒபாமாவும் ஒசாமாவும் ஒன்றாகிவிடுவார்களா? சென்னை சரசாவெல்லாம் அன்னை தெரஸாவாகிவிட முடியுமா?

சரி, மனிதர்கள் வேண்டாம். வெறும் தண்ணீரை எடுத்துக்கொள்வோமே. மண்பானைத் தண்ணீர், மழைத் தண்ணீர், சாக்கடைத் தண்ணீர், கடல் நீர், வியர்வை நீர், குடிநீர், வடிநீர், முனிசிபாலிடி குழாய்த் தண்ணீர், பாழாய்ப்போன உயிரற்ற பிஸ்லரி நீர், ஜம்ஜம் புனித நீர் – இவையெல்லாம் ஒன்றா? புனித கங்கை நீரும் கூவம் நீரும் ஒன்றா? எல்லாமே ‘ஹெச்.ட்டூ.ஓ.’-தான் என்ற வாதம் சரியா? நிச்சயமாக இல்லை என்பது நம் அனைவருக்குமே தெரியும். கொல்பவனும் நானே, கொல்லப்படுபவனும் நானே என்று கீதையில் கிருஷ்ணன் சொல்வதைப்போல, நாம் இங்கே பேசமுடியாது. அது வேறு, இது வேறு. ஒரு பெண் வாந்தி எடுத்தால் கர்ப்பமாகி இருக்கிறாளோ என்று சந்தேகப்படலாம். ஆனால் ஒரு ஆண் வாந்தி எடுத்தால் அப்படி சந்தேகப்பட முடியாது! அப்படி ஒருவர் சந்தேகப்பட்டால், அவரைப் பற்றி நாம் சந்தேகப்படும்படி ஆகிவிடும்!

Story image

கங்கை புனித நீர்

Story image

சாக்கடை நீர்

Story image

ஜம்ஜம் புனித நீர்

ஒரு செயல் எப்படிப்பட்டது, அதனைச் செய்பவர் யார், அது ஏற்படுத்தும் விளைவுகள் என்னென்ன – என்பதையெல்லாம் வைத்துத்தான் ஒரு விஷயம் நல்லதா கெட்டதா, அந்த செயலைச் செய்பவர் உயர்ந்தவரா மோசமானவரா, தகுதி உள்ளவரா இல்லாதவரா என்றெல்லாம் முடிவுக்கு வரமுடியும். அம்பாசிடர் காரில் வருபவர்களெல்லாம் அப்துல் கலாம்தான் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது அல்லவா! எனவே, நம் உடலில் சுற்றிக்கொண்டிருக்கும் க்ளுக்கோஸ் நம் உடல் நலனில் ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்துத்தான் அது நல்லதா கெட்டதா என்பதை கணிக்க முடியும் என்று டாக்டர் ஃபசுலுர் ரஹ்மானும் உறுதி செய்கிறார் (பக்கம் 17).

Story image

டயாபடீஸ் என்ற மிக முக்கியப் பிரச்னை பற்றி எழுதிக்கொண்டிருப்பதால், அது தொடர்பான சில உண்மைகளை திரும்பத்திரும்பச் சொல்லி நினைவில் வைத்துக்கொள்ளவேண்டி இருக்கிறது. எனவே, கூறியது கூறலை தவிர்க்க முடியவில்லை. இப்போது ஒரு மிகமிக முக்கியமான விஷயத்தை அறிந்துகொள்ளலாம்.

அட்ரீனலினும் க்ளைக்கோஜனும்

வயிறு, சிறுகுடல் போன்ற ஜீரண உறுப்புகளின் பலவீனம் காரணமாக அஜீரணம் உண்டாகி, அதன் விளைவாக தரம் குறைந்த க்ளுக்கோஸ் ரத்தத்தில் கலக்கிறது. அது விஷத்தன்மை கொண்டது என்பதால், உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால், சிறுநீரகங்கள் அவற்றை நீர்த்திவலைகளாக மாற்றி சிறுநீராக வெளியேற்றுகிறது. இப்படி அது செய்யவில்லை என்றால், அந்தக் கெட்ட க்ளுக்கோஸ் வயிறு, சிறுகுடல் ஆகியவற்றிலிருந்து எரிவாயுவாக வெளியாகும். அதன் விளைவாக நெஞ்சுக்கரிப்பு, உணவுப்பாதையில், வயிற்றில், குடல்களிலெல்லாம் புண்கள் ஏற்படும்.

ஜீரணமானது கல்லீரலிலும் நடைபெறுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கல்லீரல்தான் வெகுவாக ஜீரணிக்கிறது. மேலே சொன்ன விளைவுகளையெல்லாம் ஏற்படுத்தவல்ல கெட்ட க்ளுக்கோஸையும், ரத்தத்தில் கலந்துள்ள விஷத்தன்மைகளையும் தன்னுள் கல்லீரல் கிரஹித்துக்கொள்கிறது. இப்படிக் கல்லீரல் அதை கிரஹிக்க வேண்டுமானால் அதற்கு இன்சுலினின் உதவி வேண்டும்.

இன்சுலின் உதவியுடன் படுதீவிரமாக அந்தக் கெட்ட க்ளுக்கோஸையும் மற்ற உணவுப்பொருள்களையும்கூட ஜீரணித்து, அதிலுள்ள விஷத்தன்மையை நீக்கி, வீரியம்மிக்க, சக்தி வாய்ந்த நல்ல க்ளுக்கோஸாக மாற்றுகிறது கல்லீரல்! இது ஆங்கில மருத்துவம் அறியாத உண்மையாகும் என்கிறார் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான்.

கல்லீரலிலிலிருந்து வெளிப்படுத்தப்படும் க்ளுக்கோஸானது தூய்மைப்படுத்தப்பட்ட, செறிவூட்டப்பட்ட க்ளுக்கோஸாகும். அது நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட சக்தியுமாகும். நமக்கு எந்த நோய் ஏற்பட்டாலும், உடனே கல்லீரலில் இருந்து இந்தச் ‘சக்திமான்’ வெளியே அனுப்பப்பட்டு நம்மைக் காப்பார். இந்தச் சக்திமான் பெரும்பாலும் கல்லீரலில்தான் சேமிக்கப்படுவார் என்றாலும், தசை நார்களிலும் இவர் பதுக்கி வைக்கப்படுவார்! இவரது பெயர் க்ளைக்கோஜன்!

தேவைக்கு அதிகமான பணத்தை அலமாரியிலோ வங்கிக் கணக்கிலோ வைத்திருந்து, தேவைப்படும்போது எடுத்து நாம் செலவு செய்வோமல்லவா? அதைப்போல, இந்தக் க்ளைக்கோஜனும் உடலுக்கு எப்போதெல்லாம் தரமான க்ளுக்கோஸ் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ‘சப்ளை’ செய்யப்படும் என்கிறார் ஹீலர் பாஸ்கர்.

இரண்டு வகையான எரிசக்தியைப் பற்றி நாம் இதுவரை தெரிந்துகொண்டிருக்கிறோம்.

1. க்ளுக்கோஸ்

2. க்ளைக்கோஜன்

கல்லீரலுக்குள்ளிருந்து இந்தக் க்ளைக்கோஜன் என்ற சக்திமான் நம் உடலுக்குள் செல்ல வேறுவிதமான ‘பாஸ்போர்ட்’ தேவைப்படுகிறது. அதன் பெயர்தான் அட்ரீனலின் என்ற ஹார்மோன். சிறுநீரகங்களுக்கு மேல், ஷேக் அப்துல்லாவின் தொப்பி மாதிரி அமைந்திருக்கும் உறுப்புதான் அட்ரீனல் என்ற சுரப்பியாகும். அட்ரீனலில் சுரக்கும் ஹார்மோன்தான் அட்ரீனலின்.

Story image

அட்ரீனல் சுரப்பி

கல்லீரலுக்குள் தரமற்ற கெட்ட க்ளுக்கோஸ் செல்லவேண்டுமானால், தேவைப்படுவது இன்சுலின். தரம் கூட்டப்பட்டு செறிவூட்டப்பட்ட க்ளைக்கோஜன் உடலுக்குள் செல்ல வேண்டுமானால், தேவைப்படுவது அட்ரீனலின். அடடா, உடலின் அமைப்பைவிட அற்புதம் இந்த உலகில் இருக்க முடியுமா?!

அட்ரீனலின் சுரக்க ஆரம்பித்ததுமே, கணையம் இன்சுலினைச் சுரப்பதை நிறுத்திவிடும்! இன்சுலின் சுரப்பைக் குறைக்க வேண்டுமா, அல்லது முழுமையாக நிறுத்த வேண்டுமா என்ற முடிவை கல்லீரல் எடுக்கிறது! எந்த அளவுக்குக் கல்லீரலிலிருந்து க்ளைக்கோஜன் உடலுக்குள் பாய வேண்டுமோ அந்த அளவுக்கு, இன்சுலின் சுரப்பதிலிருந்து கணையத்தைக் கல்லீரல் தடுத்துவிடுகிறது அல்லது குறைத்துவிடுகிறது. எனவே, எந்த நேரத்திலும் உடலின் தேவைக்கேற்ப இன்சுலினும் அட்ரீனலினும் மாறி மாறி சுரந்து, தேவைக்கேற்ப அளவில் கூடுவதும் குறைவதுமாக இருந்துகொண்டே இருக்கும்.

சுரக்கப்பட்ட இன்சுலின், அட்ரீனலினைவிட வீரியத்துடன் உடலுக்குள் சுற்றிவருமானால், ரத்தத்திலிருந்து கெட்ட க்ளுக்கோஸ் அதிகமாகக் கல்லீரலுக்குள் செலுத்தப்படும். மாறாக, அட்ரீனலின் அளவு அதிகமாகி, ரத்தத்தில் இன்சுலினின் அளவு குறையும்போது, கல்லீரலிலிருந்து க்ளைக்கோஜன் வெளிப்படுத்தப்பட்டு, உடல் உறுப்புகளின் இயக்கத்துக்கு உதவியாக ரத்தத்தில் கலக்கும். இது உள்ளே இருந்தால் அது வெளியேயும், இது வெளியே இருந்தால் அது உள்ளேயும் என மாறி மாறி நம் உடலின் ஆரோக்கியத்துக்கு எந்தக் குறைவும் வராமல், இன்சுலின் - அட்ரீனலின் ஆகிய இரண்டு கதாநாயகர்களும் பார்த்துக்கொள்வார்கள்.

அட்ரீனலின் சுரப்பதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், ரத்தம் சுத்தமாகும், இதயத்தின் இயக்கமும் துரிதமடையும். ரத்த ஓட்டம் முறையாக, தேவையான அனைத்து உடல் உறுப்புகளுக்கும் செல்வதற்கு ஏதுவாக, ரத்த நாளங்களை அட்ரீனலின் சுருக்குகிறது. ரத்த நாளங்கள் சுருங்குமானால் ரத்த அழுத்தம் அதிகமாகும். அதாவது, ‘ஹை பிளட் ப்ரஷர்’ ஏற்படும். இந்த உயர் ரத்த அழுத்தமானது, ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அவனுடைய ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது என்றும், அதைக் குறைக்க முயல்வது ஆங்கில மருத்துவம் கற்றுக்கொடுத்த “அசம்பாவிதம்” என்றும் கூறுகிறார் டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் (பக்கம் 103).

Story image

அவர் மட்டுமல்ல, டாக்டர் பி.எம். ஹெக்டே இதுபற்றி அடிக்கடி பேசியிருக்கிறார். மகாத்மா காந்தியின் ரத்த அழுத்தம் எப்போதுமே 200/140 ஆக இருந்ததாம்! ஆனால், காந்தி ‘நார்ம’லாகத்தான் இருந்தார். அவர் சுடப்பட்டிருக்காவிட்டால், நூறு வயதைத் தாண்டி அவர் வாழ்ந்திருக்கக்கூடும். அவரது ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்த டாக்டருக்குதான் பி.பி. எகிறியதாகக் கூறி சிரிக்கிறார் டாக்டர் ஹெக்டே!

நம் உடல் உறுப்பு ஏதாவது பாதிக்கப்படும்போது, பலவீனப்படும்போது, நோய்வாய்ப்படும்போது, கல்லீரலிலிருந்து க்ளைக்கோஜன் வெளியேற்றப்படுகிறது. நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இந்தக் க்ளைக்கோஜன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புக்குக்குச் சென்று அதற்கு மிகுந்த சக்தியளிக்கிறது. நோய் நீங்க வழிவகுக்கிறது. எனவே, கல்லீரலும் அதில் உருவாக்கப்படும் க்ளைக்கோஜனும், அதை கல்லீரலிலிருந்து வெளியேற்றுவதற்காகச் சுரக்கும் அட்ரீனலின் என்ற ஹார்மோனும் நம் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானவை.

அட்ரீனலின் சுரந்திருக்கும்போது இன்சுலின் சுரப்பது குறையும் அல்லது நிறுத்தப்படும் என்று ஏற்கெனவே பார்த்தோம். ஐயையோ, இன்சுலின் சுரக்கவே இல்லை / இன்சுலின் சுரப்பு மிகவும் குறைவாக உள்ளது என்று பயமுறுத்தி, அந்த ஆரோக்கிய நிலையை நீரிழிவு நோய் என அடையாளப்படுத்தும் அபாயம்தான், அலோபதி மருத்துவமனைகளில் அன்றாடம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

நீங்கள் உண்மையிலேயே நீரிழிவு நோயாளியாக இருக்கும்பட்சத்தில், உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் தரமான க்ளுக்கோஸ்தான் என்பது இதுவரை புரிந்திருக்கும். தரமான க்ளுக்கோஸ் இல்லாதபட்சத்தில் உடல் பலவீனம், உடல் சோர்வு, உடல் உபாதைகளெல்லாம் உங்களுக்கு ஏற்படும். உங்களுக்கு நீரிழிவு வந்துவிட்டது என்பதற்கான அறிகுறிகள் அவை. இப்போது உங்களுக்குத் தேவை இன்சுலின் இன்ஜெக்ஷன் அல்ல; அட்ரீலனின் சுரப்பு. புரிகிறதா? இதற்காக நீங்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை என்பதும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அட்ரீனலின் சுரப்பதால் என்னென்னெ சாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்து அதைத்தான் பார்க்க இருக்கிறோம்.

(இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்கள், டாக்டர் ஃபசுலுர் ரஹ்மான் எழுதிய BP – டயாபடீஸ் நோயாளிகளே! உங்கள் நலனுக்காக என்ற நூலில் இருந்தும், மருந்துகளால் வரும் நோய்கள் என்ற நூலில் இருந்தும் கொடுக்கப்பட்டுள்ளன).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.