கர்நாடக வனப்பகுதியான பண்ணர்கட்டாவிலிருந்து சுமார் 200 யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தமிழகத்தின் விளைநிலங்களை அழித்தும், மனிதர்களைத் தாக்கியும் வருகின்றன. ஒவ்வொரு வருடமும் யானைகள் இவ்வாறு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி தங்கள் படையெடுப்பைத் தொடங்குகின்றன. அதே போல் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் அதே வழித்தடத்தில் மீளத் திரும்பி பண்ணர்கட்டா வனப் பகுதியை அடைகின்றன.
இந்த யானைகள் தளி ஒதுக்குக் காடுகள் வழியாக, ஜவலகிரி, அஞ்செட்டி, ஊரிகம், தேன்கனிக்கோட்டை ஒதுக்குக் காடுகளில் சில பகுதிகள் அய்யூர் வனப்பகுதி வழியே சென்று சூளூர் காட்டுப் பகுதியை அடைகின்றன. இந்த யானைக் கூட்டங்கள், சிறு சிறு கூட்டங்களாகப் பிரிந்து தமிழ்நாட்டை நோக்கி தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வருகின்றன. இவைகள் குடியிருப்புகளையொட்டிய விவசாயத் தோட்டங்கள், வயல்களில் புகுந்து கரும்பு, மாமரங்கள், வாழை மரங்கள், பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட பயிர்களைப் பறித்து எறிந்து நாசப்படுத்துகின்றன.
மாமிசம் உண்ணாத தாவர உண்ணிகள் யானை. பருவகாலங்கள் மாறும்போது அவைகளின் உணவு முறைகளும் மாறுவதால், யானைகள் உணவுக்காகவும் தண்ணீருக்காவும் ஊருக்குள் வருகின்றன. பருவகாலங்கள் மாறும்போது வனப்பகுதிகளில் புற்கள், மரப்பட்டைகள், முறிந்துபோன கிளைகள் ஆகியவைகளை உண்டு வாழ மீண்டும் வனங்களை நோக்கிச் சென்று விடுகின்றன.
துள்ளி குதிக்க முடியாத உயிரினம் யானை ஒன்றுதான். யானைகள் தண்ணீர் இருப்பதை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே வாசனை மூலம் தெரிந்து கொள்ளும். யானை ஒரே உறிஞ்சில் தனது துதிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்துக் குடிக்கும் திறனுடையது. யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டூசியைக் கூட எடுத்துவிடும். ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை யானை குடிக்கும்.
யானை துதிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது. மனிதன் உடம்பில் மொத்த தசைகளே 640 தான். யானை 24 மணி நேரம் தொடர்ந்து தண்ணீர் அருந்தவில்லை எனில் உயிரை விட்டுவிடும். யானை சராசரியாக எழுபது ஆண்டுகள் உயிர் வாழும். யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும். பொதுவாக ஒரு யானைக் கூட்டத்தில் ஒன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும். வயது வந்த ஆண் யானைகள் கூட்டத்தை விட்டுப் பிரிந்துவிடும். யானை நான்கு வருடத்தில் ஒரு முறைதான் குட்டி போடும்.
யானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளைப் புரிந்து கொள்ள இயலும். விலங்குகளில் டால்பின்களுக்கு அடுத்து யானைகள் அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன.
2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 32,900 யானைகள் உள்ளன. தமிழகத்தில் 6000-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக வனத் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் யானைகளின் எண்ணிக்கை 2 முதல் 4 சதவீதம் உயர்ந்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த பகுதிகளில் மட்டும் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.
கடந்த 15 ஆண்டுகளாக யானைகளின் வழித் தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நீலகிரி, முதுமலை, ஏற்காடு போன்ற பகுதிகளில் யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளன. அதனால் பருவ நிலையால் இடம் பெயரும் யானைகள் அதற்கென வகுக்கப்பட்ட வழித்தடங்களில் வழி தெரியாமல் கோபம் கொண்டு குடியிருப்புப் பகுதிகளிலோ அல்லது விவசாய நிலங்களிலோ புகுந்து சேதங்களை ஏற்படுத்துகின்றன. இந்த நேரங்களில் காலை அல்லது மாலை வேளைகளில் மட்டுமே இந்த யானைகள் கோபம் காரணமாக மனிதர்களைக் கொல்லத் துணியும்.
யானைகளால் விவசாய நிலங்கள் அழிவதைத் தடுக்கவும், மனித உயிர்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். இதற்கு வனத்துறையினருடன் பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் ஆனைகட்டி, அனுவாவி, மருதலை, தானிக்கண்டி, கல்கொத்தி, வாளையாறு, கல்லார், ஜக்கனாரி ஆகிய பகுதிகளின் வழியே யானைகள் இடம் பெயர்கின்றன.
உருமாறிப்போன யானைகளின் வழித்தடங்களை மீட்டெடுத்து குடியிருப்புப் பகுதிகளில் யானைகள் வராமல் தடுக்கவும், மனிதர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நீண்ட கால திட்டம் வகுக்க வேண்டும். ஊருக்கு வெளியே யானை தடுப்பு அகழிகள் அமைக்க வேண்டும். குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் யானைகளைத் துன்புறுத்தாமல் வனப் பகுதிகளுக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டாலும், யானைகளைப் பாதுகாப்பதால் விவசாய நிலங்கள் செழிப்படையும்.
தேசிய யானைகள் பாதுகாப்பு ஆணையத்தை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். இதனால் யானைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, யானைகளினால் மனிதர்களுக்கும், விளை நிலங்களுக்கும் ஏற்படும் இழப்புகள் தடுக்கப்படுவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவும் வழி வகை ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

11.4.1976: பொது பணத்தில் நிறுவிய பாலம், கல்வி சாலைகளின் தனியார் பெயர்களை நீக்க த.நா. அரசு முயற்சி

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு: அண்ணாமலை பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


