சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

புவி வெப்பம், வறட்சிக்கு முன்னோட்டம்

இந்திய மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.  பாய்ந்தோடும் ஆறுகள், நதிகள், அமைதி தவழும் ஏரிகள், குளங்கள்

News image
Updated On :25 மார்ச் 2013, 12:08 am

இந்திய மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.  பாய்ந்தோடும் ஆறுகள், நதிகள், அமைதி தவழும் ஏரிகள், குளங்கள், சீறிப் பாயும் நீர்வீழ்ச்சி, வரவேற்பு வளையங்கள் போல காணப்பட்ட சாலையோர மரங்கள், பூமித் தாய் பச்சை பட்டாடை உடுத்தியது போன்று எங்கும் காணப்பட்ட வயல் வெளிகள், காடுகள், கனிம வளங்கள் ஆகியவை தட்ப வெப்ப நிலையை மாற்றாமல் மாதம் மும்மாரி பெய்து  வளம் கொழிக்கும் நாடாக இந்தியா விளங்கியது.

நாம் வாழும் பூமியைச் சுற்றிலும் உள்ள காற்று மண்டலம்தான் அதாவது மரம், செடி, கொடிகள் போன்ற பசுமைத் தாவரங்கள்தான் நாம் சுவாசிப்பதற்காக ஆக்சிஜனை வைத்துள்ளன. பூமி அதிகமாகச் சூடாகி விடாமலும், அதிகமாகக் குளிர்ச்சியடைந்து விடாமலும் இருக்க இந்தக் காற்று மண்டலம்தான் உறுதுணையாக விளங்குகிறது. இந்தக் காற்று மண்டலத்தில் ஆக்சிஜனுடன் கார்பன் டை ஆக்ûஸடு, நைட்ரஸ் ஆக்ûஸடு, மீத்தேன் போன்ற வாயுக்களும் உள்ளன.  இந்த வாயுக்கள் கண்ணாடியைப்போலச் செயல்பட்டு  புவிக்குள் வந்த வெப்பத்தை மீண்டும் வெளியேற்றாமல் தடுத்துவிடுகின்றன. அதாவது, வளி மண்டலத்தில் மாசு அதிகரிப்பதால் ஏற்படும் அசாதாரண வெப்ப உயர்வால் புவி வெப்பமடைகிறது. சூரியனிடமிருந்து பூமிக்கு வரும் வெப்பத்தை மண், நீர், உயிரிகள், தாவர இனங்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. மீதமுள்ள வெப்பம்  பசுமைக்குடில் வாயுக்களால் (ஆக்சிஜன், கார்பன்டை ஆக்ûஸடு, நைட்ரஸ் ஆக்ûஸடு, மீத்தேன்) மீண்டும் வான்வெளிக்கே திருப்பி அனுப்பப்படுகின்றன.

வான்வெளியில் கார்பன் டை ஆக்ûஸடு, நைட்ரஸ் ஆக்ûஸடு, மீத்தேன்,  ஹைடிரோ ஃபுளோரா, கார்பன் போன்ற வாயுக்களின் அளவு அதிகமாகும்போது, பூமியை நோக்கி வரும் வெப்பத்தின் அளவும் அதிகரிக்கிறது. இதனால் பூமியில் இயல்பைவிட வெப்பம் அதிகமாகக் காணப்படுகிறது. 

 உலகின் மூன்று கண்டங்களில் உள்ள பிரதான மலை முகடுகள் குறைந்தும், சாக்கடல், சாட் ஏரி போன்ற நீர்நிலைகள் புவி வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தால் சுருங்கியும் உள்ளன என்றும், ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலையான டான்சானியாவின் கிளிமஞ்சாரோவின் உயரம் குறைந்துள்ளது என்றும், தென்னாப்பிரிக்காவின் உயர்ந்த மலைகளில் ஒன்றான அகானகாகுவா மற்றும் ஆன்டீஸ் மலைகளும் சுருங்கி வருவதாகவும் புவியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தவிர, பெருகிவரும் வாகனங்கள், அவை கக்கும் புகைகள் இப்புவியை மாசடையச் செய்து புவி வெப்பத்தை அதிகரிக்கின்றன. பூமியின் சராசரி வெப்பம் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் ஒரு முறை 0.5 டிகிரி சென்டிகிரேடு கூடுவதாக ரஷிய விஞ்ஞானி பியடி கோன்னபார்  எச்சரித்துள்ளார். இந்த நூற்றாண்டில் மட்டும்  0.74 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புவி வெப்பமடைவதால் பனிப்படலம் அதிகமாக பாதித்து கடல்மட்டம் அதிகரிக்கிறது. அதனால் தட்பவெப்ப நிலையில் மாற்றம்} ஏற்றம், மழையின் அளவும் குறைகிறது. விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டு உணவுப் பொருள்களின் உற்பத்தி குறைகிறது.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெரு மகா நகரங்களுக்குக் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் போன்ற அத்தியாவசியமான உணவுப் பொருள்கள் அனைத்தும்  அங்குள்ள புறநகர் பகுதிகளில் பயிரிடப்பட்டு நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வந்தன.  ஆனால், அந்த புறநகர் பகுதிகள் அனைத்தும் பன்னாட்டு தொழில் அதிபர்களால் கபளீகரம் செய்யப்பட்டு, அங்கு அடுக்குமாடிகளும், தொழிற்கூடங்களும், கல்லூரிகளும் கட்டப்பட்டு வருவதால் விளைச்சல் ஏதுமின்றி புவி வெப்பமும், அங்கு நீர் பற்றாக்குறையும் அதிகமாகி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். 

இழைஒளி விளக்கை பயன்படுத்துதல்,  குளிர்சாதனப் பெட்டி, குளிர்சாதன அறை  பயன்படுத்துதலைப் படிப்படியாகக் குறைத்தல், காகிதம், விறகுகளுக்கு மரங்களை வெட்டாமல் அதிக அளவில் மரங்களை வளர்த்து பேணிக் காத்தல், மின்சாரம் உள்ளிட்ட எரிபொருளைச் சிக்கனமாகச் செலவழித்தல், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தாமை, வாகனங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற சிறு சிறு நடவடிக்கைகளின் மூலம் புவி வெப்பத்தை எளிமையாகத் தடுக்கலாம்.

 புவி வெப்பமடைதலை முற்றிலும் தடுக்க வேண்டுமானால் காடுகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும். பிளாஸ்டிக்கை முற்றிலும் அழிக்க வேண்டும். கால்நடைகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும். வேளாண் பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க வேண்டும், விளை நிலங்களிலோ, விளை நிலங்களுக்கு அருகிலோ பன்னடுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளையோ வேறு பல கட்டடங்களையோ  கட்ட அனுமதிக்கவே கூடாது. 

இப்போதைய புவி வெப்பம், எதிர்கால வறட்சிக்கு முன்னோட்டம். புவி வெப்பமயமாதலை இந்தியா தடுக்கத் தவறுமேயானால் வறட்சிதான் எங்கும் மிஞ்சும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.