இந்தியப் பகர ஆளுநர் கர்சன் பெருமகன், (Lord Curzon, Viceroy of India)செப்தம்பர் 2, 1901 இல் சிம்லாவில் ஆங்கிலேயக் கல்வியாளர்களை மட்டும் கொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்டினார். இங்கும் தாய்மொழிவழிக்கல்வியே வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத் தாமசு இராலேயின் (Thomas Raleigh) தலைமையில் அமைக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழக ஆணையம், இந்தியச் செம்மொ ழிகளை மேம்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தது. அப்பொழுது செம்மொழி என்றால் சமசுகிருதமும் அரபியும் பெர்சியனும் என எண்ணப்பட்டது. காலத்தே மூத்த உயர்தனிச் செம்மொழியான செந்தமிழுக்கு அறிந்தேற்பு கிடைத்த பின்பும் மாநாடுதான் நடத்த முடிந்ததே தவிர, முழுமையான கல்வி மொழியாக நம்மால் ஆக்க இயலவில்லை.