மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மகத்துவம் மிக்க மலைக்காடுகள்

மிகப்பெரிய மருத்துவமனைகளால், மருத்துவர்களால், மருந்துகளால் கொடுக்க முடியாத ஆரோக்ய நல்வாழ்வை காடுகள் நமக்குத் தருகின்றன.

News image
Updated On :29 ஜூன் 2014, 9:11 pm

மிகப்பெரிய மருத்துவமனைகளால், மருத்துவர்களால், மருந்துகளால் கொடுக்க முடியாத ஆரோக்ய நல்வாழ்வை காடுகள் நமக்குத் தருகின்றன. காட்டுக்குள் சென்று வருவது உடலுக்கும், உள்ளத்துக்கும் பெரும் நன்மை அளிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். காடுகள் மன அழுத்தம், நெருக்கடியைக் குறைக்கின்றன. மனநிலையை உயர்த்துகின்றன. கோபத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றன. வியப்பூட்டும் மகிழ்ச்சியைக் கூட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் நீண்ட பட்டியலையே போடுகிறார்கள். காட்டுக்குள் செல்லும்போது மனச் செயல்பாடுகள் அதிகரிப்பதால் நம்முடைய நோய் எதிர்ப்புத் தன்மை வலுப்பெறுகிறது. புற்றுநோய் செல்களை அழிக்கும் இயற்கையான "கில்லர் செல்களின்' எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இயற்கையை நாடிச் சென்ற பலரும் அந்தச் சூழ்நிலை அவர்களுக்கு உன்னதமான உடல் உள்ள உணர்வுகளை வழங்கியிருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் இயற்கையின் இந்த குணமளிக்கும் தன்மைக்கு அறிவியல் ஆதாரம் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது என்று பின்லாந்து வன ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ஈவாகார் ஜலைனைன் தெரிவிக்கிறார்.

இயற்கையான சூழலில் ரத்த அழுத்தம், இருதயத் துடிப்பு வேகம், தசை இறுக்கம், நெருக்கடி கொடுக்கும் ஹார்மோன்களின் அளவு மிக விரைவாகக் குறைகிறது. பசுமையான சூழலில் மன அழுத்தம், கோபம், கவலை போன்றவை சீரடைகின்றன.

குழந்தைகளுக்கு சில நோய்க்கான அறிகுறிகள் குறைகின்றன. மக்கள் மன நெருக்கடியில் இருந்து மீளவும், ஆரோக்கியத்தைக் காக்கவும், வியாதிகளிலிருந்து குணமாகவும் குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் அவ்வப்போது பசுமை நிறைந்த மலைக்காடுகள், இயற்கை சூழ்ந்த பகுதிகளுக்குச் சென்று வருவதை பழக்கமாக்கிக் கொண்டால் புத்துணர்வும், புதுத்தெம்பும் பெற்று செயல்திறன் அதிகரிப்பதுடன் இயற்கையாகவே உடல், உள்ள ஆரோக்கியத்தைப் பெற்று வாழலாம்.

பள்ளி விடுமுறை நாள்களில் குழந்தைகளை இயற்கை சூழ்ந்த பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதால் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் மன இறுக்கம் குறைந்து புத்துணர்வும் நல்ல ஆரோக்கியமும் கிடைக்கும். தொடர்ந்து அவர்கள் நன்முறையில் படிக்கவும், சிந்திக்கவும், பெற்றோர்கள் அவர்களது கடமைகளை உற்சாகத்துடன் செய்திடவும் வழி ஏற்படும். உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கையே நல்ல காற்றையும், நல்ல தண்ணீரையும், நல்ல உணவையும், நல்ல புத்துணர்வையும், மகிழ்ச்சியையும், குறைவில்லாமல் வழங்கிக் கொண்டிருக்கிறது. இதனை மனித சமுதாயம் சற்றே உணர்ந்து இயற்கையை அழிக்காமல், மாசுபடுத்தாமல் அனுபவித்துப் போற்றிப் பாதுகாத்திட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.