

சீரகச்சாதம் (Jeera Rice)
தேவையான பொருட்கள்:
சீரகச்சம்பா அரிசி-1கப்
தண்ணீர்-2 கப்
உப்பு-தேவையான அளவு
நெய்-ஒரு டீஸ்பூன்
தாளிக்க:
சீரகம் -1 டீஸ்பூன்
பிரியாணி இலை- 1
லவங்கப்பட்டை -1
கிராம்பு -ஐந்து /ஆறு
முந்திரிப்பருப்பு -8
காய்ந்த திராட்சை -6
குங்குமப் பூ -1சிட்டிகை
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயத்தாள்-1 கைப்பிடி(பொடியாக நறுக்கியது)
செய்முறை :
ஒரு கப் சீரகச்சம்பா அரிசி முங்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்கவும்,அரிசியை அதிகம் பிசையாமல் மென்மையாகக் கழுவி தண்ணீரை வடித்து விட்டு குக்கரில் அரிசியைப் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு டீஸ்பூன் நெய் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் ஏற்றவும்.ஒரு விசில் வந்ததும் இறக்கி வைத்து கேஸ் போனதும் குக்கரைத் திறந்து தாளிக்க கொடுத்த பொருட்களை தாளிதம் செய்து சாதத்துடன் கலக்கவும்.கலக்கும் போது அன்னக்கரண்டிபயன்படுத்த வேண்டாம்.1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு குக்கரை மூடி விட்டு சில நிமிடங்கள் சென்றதும் முள் கரண்டியால் மென்மையாகக் கிளறி விட்டு அலங்காரமாக மேலே பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள் தூவிப் பரிமாறலாம்,இந்த சீரகச் சாதத்திற்கு பாசிப்பயிறு கிரேவி அருமையான சைட் டிஷ்.
பாசிப்பயிறு கிரேவி:
தேவையான பொருட்கள்:
பாசிப்பயிறு -1கப்
தண்ணீர் -2 அல்லது 21/2கப்
சின்ன வெங்காயம் -6
மசால் பொடி -2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
அரைக்க :
தக்காளி-2 அல்லது 3
பச்சை மிளகாய் -1
இஞ்சி -1 சின்ன துண்டு
பூண்டு -4 பல்
மிளகு -1 டீஸ்ஸ்பூன்
பெருஞ்சீரகம்-1 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய்(அ)நெய் - 2 டீஸ்பூன்
கடுகு -1டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு -1டீஸ்பூன்
கருவேப்பிலை -1ஆர்க்
செய்முறை:
குக்கரில் ஒரு கப் பாசிப்பயிறு எடுத்துக்கொண்டு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்,அரைத்து எடுத்த மசாலாப் பொருட்கள் மற்றும் மஞ்சள் தூள்,மசால் பொடி தேவையான அளவு உப்பு எல்லாம் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி மூடிவிட்டு குக்கரை அடுப்பில் ஏற்றவும்.மூன்று விசில் வந்ததும் இறக்கி தாளிதம் செய்து பரிமாறலாம்.சீரகசாதத்திற்கு பாசிப்பயிறு கிரேவி சேர்த்தால் குழந்தைகள் கூட இரண்டு பிடி அதிகம் சாப்பிடுவார்கள்.சுவையோடு சத்தும் அதிகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.