நீட்-2026 மறுதேர்வு வினாக்கள் கசிந்தனவா? சைபர் கிரைம் விசாரணைக்கு என்டிஏ உத்தரவுதிமுக தோல்விக்கு யார் காரணம்? முன்னாள் அமைச்சர் மூர்த்தி வேதனை!எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எல் நினோ! ஜூன் - ஆகஸ்ட் வரை வெய்யில்தான்!முதல்வர் விஜய் முன்னிலையில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையொப்பம்!நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்! தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!
/

முடக்கத்தான் தோசை

News image
Updated On :11 ஏப்ரல் 2017, 12:00 am IST

தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - 1 கிண்ணம்
புழுங்கல் அரிசி - 1கிண்ணம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
முடக்கத்தான் இலைகள் - 4 கிண்ணம்
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: 

முடக்கத்தான் இலைகளை அலம்பி, வடிகட்டி, இஞ்சியுடன் சேர்த்து அரைக்கவும். அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 3 மணிநேரம் ஊற வைத்து அரைக்கவும். 15 நிமிடங்கள் அரைத்ததும், கீரை விழுதையும் சேர்க்கவும். நன்கு அரைத்து சுமார் 10 மணி நேரம் புளிக்க வைக்கவும். ஒரு துளி எண்ணெய் விட்டு தோசை வார்த்தெடுத்து, விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.


குறிப்பு: முடக்கு அற்றான் கீரை என்ற பெயரே இதன் தன்மைகளை விளக்குகிறது.  முடக்கு வாதத்தை, வலிகளை போக்கக் கூடியது. மிகச் சுலபமாக வீட்டில் வளரக் கூடியது. எல்லா கீரை கடைகளில் கிடைக்கக் கூடியது. மருத்துவ குணங்கள் நிறைந்த இந்தக் கீரையை பயன்படுத்தி வாத நோய் நம்மை அண்ட விடாமல் செய்வோமாக. காம்புகளை விலக்கி விட்டு இலைகளை உருவி உபயோகிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.