வெண்டைக்காய்ப் புளி பச்சடி
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.


தேவையான பொருள்கள்:
நறுக்கின வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 2
புளி - நெல்லிக்காய் அளவு
தேங்காய் விழுது - 5 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் - 1தேக்கரண்டி
சாம்பார் வெங்காயம் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
வெண்டைக்காயை மெலிதாக வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், பச்சைமிளகாய், மஞ்சள் தூள், சீரகம், சாம்பார் வெங்காயம், சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வெண்டைக்காய் சேர்த்து வதக்கி சிறிதளவு உப்பு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் புளி தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
பிறகு மூடியைத் திறந்து அரைத்த மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போனவுடன் இறக்கவும். சுவையான வெண்டைக்காய்ப் புளி பச்சடி ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...