மெய்யாலுமா?
நாடாளுமன்றத்தையே சந்திக்காத இந்தியாவின் ஒரே பிரதமரின் மகன் படும்பாடு தலைநகரில் பாட்டாய்ப் பாடப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் தனியாகப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்துவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த அவருட


நாடாளுமன்றத்தையே சந்திக்காத இந்தியாவின் ஒரே பிரதமரின் மகன் படும்பாடு தலைநகரில் பாட்டாய்ப் பாடப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் தனியாகப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்துவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த அவருடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருப்பது பழைய செய்திதனக்கு உணவு மற்றும் பொது விநியோகம் அல்லது விவசாயம் போன்ற துறைகளின் கேபினட் அமைச்சர் பதவி வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் அவருக்கு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தைத் தரக் காங்கிரஸ் மேலிடம் ஒத்துக் கொண்டது. கூடவே ஒரு நிபந்தனையும் விதித்ததாம். அதைக் கேட்டதும் அவர் அதிர்ந்து போய்விட்டாராம்.நிபந்தனை என்னவென்றால், முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் தனது பதவிக் காலத்தில் செய்த முறைகேடுகள் பற்றித் துருவி விசாரிக்கக் கூடாது என்பதுதான். நிபந்தனையுடனான அமைச்சர் பதவி வேண்டாம் என்று அவர் பிடிவாதம் பிடிப்பதால், அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போகிறதாமே, மெய்யாலுமா? போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட'' என்று விழுப்புரம் மாவட்டக் காவல் துறையினர் சொல்லிச் சிரிக்கிறார்களாம். ஏழே மாதத்தில் கைக்கெட்டாத உயரத்துக்குச் சென்றவர் இப்படி தொடங்கிய இடத்துக்கே திரும்ப வந்து சேர்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அவர் இது தனது நேர்மைக்குக் கிடைத்த பரிசு என்று கூறி வருத்தப்படுகிறார் என்றால், காவல்துறை உயர் மட்டத்தில், தனது உயரம் தெரியாமல் நடந்து கொண்டதன் விளைவுதான் இது என்கிறார்கள். இது தற்காலிக சூழ்நிலை மாற்றம்தான் என்று கருதும் அந்த அதிகாரி, வேலில்லாத முருகன் போலத் தவிக்கும் மேலிடத்துக்கு நெருக்கமானவர் தன்னை மீண்டும் பழைய இடத்துக்குக் கொண்டு போய் விடுவார் என்று நம்புகிறாராமே, மெய்யாலுமா? மூன்றாவது முறை ஆட்சி அமைத்திருக்கும் இன்றைய முதல்வரின் கீழ் ராஜினாமாக் கடிதம் கொடுத்த ஒரே அமைச்சர் என்கிற பெருமைக்குரியவர் திருச்சிக்காரர்தான் போலிருக்கிறது. சாதாரணமாக நேராக ஆளுநர் மாளிக்கைக்குப் போய் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் முதல்வர் இவரது விஷயத்தில் மட்டும் ஏன் அப்படிச் செய்யாமல் ராஜினாமா செய்யச் சொன்னார் என்று தலையைப் பிய்த்துக் கொள்கிறார்களாம் மூத்த அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும்,மெய்யாலுமா? மெய்யாலுமா' பகுதியின் தாக்கம் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. காங்கிரஸ் எம்.பிக்கள் இப்போதெல்லாம், தனித் தனியாகப் பேட்டி கொடுக்காமல் மொத்தமாக மூத்த காங்கிரஸ் எம்.பி.யும், கொறடாவுமான என்.எஸ்.வி. சித்தனின் தலைமையில்தான் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்கள். அப்படியும்கூட கடலூர்க்காரரும் வந்தவாசிக்காரரும் வருவதில்லையாமே, மெய்யாலுமா? கடந்த ஆட்சிக்கு நெருக்கமான, இந்த ஆட்சியில் சற்று தள்ளியே இரும் பிள்ளாய் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்திய அரசுப் பணி அதிகாரி எழுதிய புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அரசுப் பணியில் தேர்வு பெறுவது எப்படி என்று இளைய தலைமுறைக்கு ஊக்கம் அளிக்கும் அந்த மனிதருக்கு எந்த அளவுக்கு நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது என்பது அந்த விழாவின்போது தெரிந்தது. இறைவனின் சித்தமா அல்லது அந்த மனிதருடைய அன்பின் அடையாளமா என்று தெரியாது, ஆட்சியாளர்களுக்கு நெருக்கமில்லாதவர் என்று தெரிந்திருந்தும், சுமார் 40க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அந்த விழாவுக்கு வந்திருந்தார்களாமே, மெய்யாலுமா? முல்லைப் பெரியாறு பிரச்னையால் பயந்து போய் இருக்கிறாராம் அஞ்சா நெஞ்சுக்கு சொந்தக்காரரான அமைச்சர். அணைக்கு அந்தப் பக்கமாகக் கேரள எல்லையில் இவருக்கு எஸ்டேட்டும் பண்ணை வீடு எல்லாம் இருக்கிறதாம். தமிழ்நாடு நெம்பர் பிளேட்டுகளுடனான பண்ணை வீட்டு வாகனங்களை உபயோகப்படுத்தாமல் ஷெட்டில் பூட்டி வைக்கச் சொல்லி இருக்கும் அவர் "உரம்' வாங்கக் கூட பண்ணை வீட்டு வண்டிகளை உபயோகப்படுத்த வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.அதிருக்கட்டும். நம்ம ஊர் முன்னாள் முதல்வர் ஒருவருக்கும் எஸ்டேட், பங்களா என்று அந்தப் பக்கம் இருப்பதாகச் சொல்கிறார்கள். விசாரித்தபோது "ஓ' என்று அங்கே வாழும் மலையாளிகள் சொல்கிறார்களாமே, மெய்யாலுமா? முல்லைப் பெரியாறு பிரச்னையை ஊதி ஊதிப் பெரிதாக்கும் மலையாளப் பத்திரிகையின் செயல்பாடுகளைத் தமிழக முதல்வர் ஏன் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்கிறார் என்று கேட்கிறார்கள் ஏனைய மலையாளப் பத்திரிகைகள். தமிழகத்தில் உள்ள அவர்களது ரப்பர் தொழிற்சாலையைக் காரணம் காட்டினால் அடங்கி விடுவார்களே, இதுகூடவா தெரியவில்லை என்று அந்தப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்களாமே, மெய்யாலுமா? தகவல் தொழில்நுட்பம் என்றாலே அதில் ஏதாவது பிரச்னை இருக்கும் போலிருக்கிறது. சந்தோஷமாக தொழில்நுட்பத்துடன் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த செயலாளர் திடீரென்று மாற்றப்பட்டதன் பின்னணி ரகசியம் பற்றி கோட்டையில் (செங்கோட்டையில் அல்ல) பரபரப்பாகப் பேசிக் கொள்கிறார்கள். விளம்பரம் இல்லாமல் விளம்பரத்தில் கைவைக்க, தென்னை மரத்தில் தேள்கொட்டப் பனை மரத்தில் நெறிகட்டிய கதையாகி விட்டது என்று கேள்வி. பூக்கடைக்கு விளம்பரம் வேண்டுமா என்பார்கள். அது பூங்காவுக்கும் பொருந்தும்தானே என்பதால்தான் சந்தோஷம் கலைந்தது என்கிறார்களே, மெய்யாலுமா? பல்லவர்களின் தலைநகரில் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர்போன காலம்சென்ற கம்யூனிஸ்ட் தலைவரின் பெயர் கொண்ட ஒன்றியக் குழுத் தலைவருக்கு மக்கள் மத்தியில் மரியாதையும் பாராட்டும் அதிகரித்திருக்கிறது. அட, அதுதான் ஒரு ரயில் நிலையத்துக்கே பெயர் சூட்டப்பட்டிருக்கும் பொதுவுடைமைவாதியின் பெயர் என்ன என்றுகூடவா தெரியாது?விஷயம் வேறொன்றும் இல்லை. மாட்டு வண்டிகளில் ஒரு சிலர் தங்களது வீடுகட்டும் தேவைக்காக மணல் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். "பிச்சை எடுத்தாராம் பெருமாளு, அதையும் பிடுங்கியதாம் அனுமாரு' என்ற கதையாக அந்த மாட்டு வண்டிகளை மடக்கிப் பிடித்தாராம் அதிகாரி ஒருவர். லாரியில் மணல் கடத்துபவர்களை எல்லாம் மாமூல் வாங்கிக்கொண்டு விட்டு விடுவதும், சொந்த உபயோகத்துக்காக மாட்டு வண்டியில் மணல் எடுத்துச் செல்பவர்களின்மீது வழக்குத் தொடர்ந்து தங்களை நேர்மையானவர்களாகக் காட்டிக் கொள்வதுமாக இருந்த காவல்துறையினர் இந்த நாடகத்தை அம்பலப்படுத்தியதுதான் அதிமுக பிரமுகரின் செல்வாக்குக்குக் காரணம் என்று கேள்வி.எத்தனை லாரி மணல் கடத்தப்படுகிறது, அதற்கு எவ்வளவு பணம் வசூலிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் அனைத்தையும் விலாவாரியாகப் பட்டியல் போட்டும் புகாராக அளித்து விட்டிருக்கிறாராமே?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...