பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

பண்ணின் பெருமை

பார்த்தசாரதி சபாவில் கடந்த 26ஆம் தேதி காலை 9 மணியளவில் சென்னை ராணிமேரி கல்லூரி இசைத்துறை தலைவர் டாக்டர் எம்.ஏ. பாகீரதியின்

News image
Updated On :3 ஜனவரி 2014, 10:21 pm

பார்த்தசாரதி சபாவில் கடந்த 26ஆம் தேதி காலை 9 மணியளவில் சென்னை ராணிமேரி கல்லூரி இசைத்துறை தலைவர் டாக்டர் எம்.ஏ. பாகீரதியின்

தெய்வ தமிழிசையின் உருவகங்கள் என்கிற தலைப்பில் பயிலரங்கம். இவர் 26 ஆண்டுகளாக தமிழிசை சங்கத்தில் பண்ணாராய்ச்சி செய்து வருபவர். தமிழ் மீதும், தமிழிசை மீதும் பற்றும் ஆளுமையும் உள்ளவர்.

""கர்நாடக சங்கீதத்தில் மேளகர்த்தா ராகங்கள் என்று ஒழுங்குபடுத்தப்பட்டு அதன் அடிப்படையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் கச்சேரி பாடும் முறையைப் போல பண்ணிசையிலும் இருக்கிறதா? பண் என்பதே ராகம்தான். பண்ணிசையிலும் கச்சேரிக்கான பத்ததி பின்பற்றப்படுகிறது. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிவிட்ட சிலப்பதிகாரத்தில் ஆற்று வரி, கானல் வரி ஆகியவற்றில் பல்லவி, சரணம் ஆகிய அமைப்பு இருக்கிறது.

தமிழ் வழி முறைக் கச்சேரிக்கு பஞ்சபுராணம் என்று பெயர். பஞ்சபுராணம் பாடினால் கவலைகள் பஞ்சாய்ப் பறந்துவிடும் என்று கூறப்படுவதுண்டு. பாடகரை பரசுவதியர் என்றும் உடன் பாடுபவர் மாகதர் என்றும் பண்ணிசையில் அழைக்கப்படுகிறார்கள்.

11,000 பண்கள் தமிழிசையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இவற்றை ஆராய்ந்து வழிகொணரும் முயற்சியை தமிழிசை சங்கம் பல காலமாக செய்து வருகிறது.

ஆலயங்களில் ஓதுவார்கள் இசைக்கும் தேவார இசைதான் தமிழிசை ஒன்று இருந்தது என்பதற்கு நம்மிடம் உள்ள ஆதாரம். சாதாரி (பந்துவராளி), வியாழக்குறிஞ்சி (செüராஷ்டிரம்), சீகாமரம் (நாத நாமக்ரியா), மேகராகக் குறிஞ்சி (நீலாம்பரி), இந்தளப் பண் (மாயாமாளவ கெüளை) போன்ற பல ராகங்கள் தேவாரத்தின் மூலம் தமிழிசையில் இருந்தது தெரிய வருகிறது''- இதுபோல பல சுவையான செய்திகளை எடுத்துரைத்த முனைவர் பாகீரதி தனது இனிய குரலில் பாடியும் காட்டி விளக்கினார்.

தேவாரங்களை முறையாக பல வருடங்கள் ஓதுவார்களிடம் பயின்று தேர்ந்த முனைவர் பாகீரதி இறுதியாக காவடிச் சிந்து பாடும் வழக்கத்தைப் பற்றி விவரித்தார். இவருக்கு பக்கவாத்தியமாக வயலினில் ஹரிணி ஸ்ரீவத்ஸாவும், மிருதங்கத்தில் மணிகண்டனும் நிகழ்ச்சிக்கு வலு சேர்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.