ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 1. சிவபுராணம்-7

நள்ளிருளில் நடனத்தைச் சிறப்பாகப் பயின்று ஆடும் நாதனே,

News image
Updated On :17 ஜூலை 2015, 12:48 pm

என்.சொக்கன்


7

பாடலின்பம்

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே,

தில்லையுள் கூத்தனே, தென்பாண்டி நாட்டானே,

அல்லல் பிறவி அறுப்பானே, ‘ஓ’ என்று

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர், சிவபுரத்தின் உள்ளார், சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து.
 

பொருளின்பம்

நள்ளிருளில் நடனத்தைச் சிறப்பாகப் பயின்று ஆடும் நாதனே,

தில்லையில் (சிதம்பரத்தில்) கூத்தாடுபவனே,

தென்பாண்டி நாட்டை உடையவனே,

துன்பம் தரும் பிறவியை அறுப்பவனே,

‘ஓ’ என்று கூக்குரலிட்டு, சொல்லுவதற்கு அரிய சிவபெருமானின் புகழைச் சொல்லி, அவனுடைய திருவடிகளில் இந்தச் சிவபுராணம் சாற்றப்படுகிறது,

இதன் பொருளை உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபுரம் செல்வார்கள், பலரும் அவர்களைப் போற்றுவார்கள், சிவபெருமானின் திருவடிகளில் பணிந்து அவர்கள் சிறப்பார்கள்!
 

சொல்லின்பம்

நட்டம்: நடனம்

அல்லல்: துன்பம்

ஏத்த: பாராட்ட/ போற்ற

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.