பகுதி 2 - கீர்த்தித் திரு அகவல் 2
கேவேடர் ஆகிக் கெளிறு அது படுத்தும்மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்


பாடலின்பம்
கேவேடர் ஆகிக் கெளிறு அது படுத்தும்
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்
மற்று அவைதம்மை மகேந்திரத்து இருந்து
உற்ற ஐம்முகங்களால் பணித்து அருளியும்...
பொருளின்பம்
இவ்வரிகளில் குறிப்பிடப்படுவது, ஆகமங்களைப்பற்றிய ஒரு புராணக் கதை.
சிவபெருமான் அம்பிகைக்கு ஆகமங்களின் பொருளை உபதேசித்தான். ஆனால், ஏனோ அம்பிகை அதில் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே, அவள் மீனாகப் பிறக்கவேண்டும் என சிவபெருமான் சபித்துவிட்டார்.
இதனால், அம்பிகையின் மகன்களான பிள்ளையாரும் முருகனும் ஆகம நூல்களைக் கடலில் வீசி விட்டார்கள். பின்னர், இறைவன் ஒரு மீனவனாக வந்து, ஆகமங்களைப் பெற்று, அம்பிகையையும் மணந்தான்.
அப்படி மீனவனாக வந்து, கெளிற்று மீன்களைப் பிடித்து, பெருவிருப்பம் கொண்ட ஆகமங்களை வாங்கியவனே, அந்த ஆகமங்களை மகேந்திர மலையில் இருந்து ஐந்து முகங்களால், ஓதியவனே,
சொல்லின்பம்
கேவேடர்: மீனவர்
கெளிறு: ஒருவகை மீன்
வேட்டு: வேட்கை/ விருப்பம்
ஐம்முகங்கள்: ஐந்து முகங்கள் (சிவனின் ஐந்து முகங்களாகக் குறிப்பிடப்படுபவை: சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...