ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 2 - கீர்த்தித் திரு அகவல் 4

திருவிடைமருதூரில் அடியவர்களுடன் இருந்து தன் தூய்மையான பாதங்களை அவர்கள் தலைமேல் வைத்து அருளிய தன்மை கொண்டவனே,

News image
Updated On :20 ஜூலை 2015, 12:05 pm

என்.சொக்கன்

11

பாடலின்பம்

தேன் அமர் சோலை திருவாரூரில்

ஞானம் தன்னை நல்கிய நன்மையும்

இடைமருது அதனில் ஈண்ட இருந்து

படிமப் பாதம் வைத்த அப்பரிசும்

ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து

பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்

திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து

மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்…


பொருளின்பம்

தேன் நிறைந்த மலர்ச்சோலைகளைக் கொண்ட திருவாரூரில் ஞானம் தந்து நன்மை செய்தவனே,

திருவிடைமருதூரில் அடியவர்களுடன் இருந்து தன் தூய்மையான பாதங்களை அவர்கள் தலைமேல் வைத்து அருளிய தன்மை கொண்டவனே,

திருவேகம்பம், அதாவது காஞ்சி நகரில் தன்னுடைய இயல்புத்தன்மையுடன் எழுந்தருளி, தன் உடலில் ஒரு பாகத்தை உமையாளுக்காகக் கொடுத்த தன்மை கொண்டவனே,

திருவாஞ்சியத்தில் சிறப்புடன் திகழ்ந்து, மணம் நிறைந்த கூந்தலைக் கொண்ட உமையம்மையோடு மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் அழகனே,


சொல்லின்பம்

ஈண்ட: கூட்டமாகச் சேர

படிமம்: தூய்மை

பரிசு: தன்மை

சீர்: சிறப்பு

மரு: மணம்/ வாசனை

ஆர்: நிறைந்த

குழல்: கூந்தல்

குழலி: கூந்தலைக் கொண்டவள்

வண்ணம்: அழகு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.