ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 2 - கீர்த்தித் திரு அகவல் 5

முடிவில்லாத பெருமையும் அருளும் கொண்ட அண்ணல் சிவபெருமான்,அவன் எங்களை ஆண்ட தன்மையைச் சொல்வதென்றால், வலிமையும் அழகும் கொண்ட

News image
Updated On :20 ஜூலை 2015, 12:07 pm

என்.சொக்கன்

12

பாடலின்பம்

அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்

எம் தமை ஆண்ட பரிசு அது பகரின்,

ஆற்றல் அது உடை அழகு அமர் திருவுரு

நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்

ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும்

ஆனந்தம்மே ஆறா அருளியும்

மாதிற் கூறு உடை மாப்பெரும் கருணையன்

நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்

அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்

கழுக்கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும்,
 

பொருளின்பம்

முடிவில்லாத பெருமையும் அருளும் கொண்ட அண்ணல் சிவபெருமான்,

அவன் எங்களை ஆண்ட தன்மையைச் சொல்வதென்றால், வலிமையும் அழகும் கொண்ட தன்னுடைய திருவுருவத்தைத் திருநீற்றுக் கோடுகளுடன் உயர்வாகக் காட்டினான், எங்களுடைய பிறவி என்கிற

ஊனத்தை மொத்தமாக அறுக்கின்ற பேரானந்ததப் பெருவெள்ளத்தை அருளினான்,

அன்னையைத் தன் உடலின் ஒரு பகுதியாகக் கொண்ட சிவபெருமான், மிகப் பெரிய கருணை கொண்டவன்,

பிரணவம் என்கிற பெருமுரசு ஒலிக்க, அடியவர்களுடைய உள்ளத்தில் அழுக்குச் சேராதபடி ஆண்டுகொண்டு அருள் செய்பவன், சூலாயுதத்தைக் கையில் ஏந்தி அருள் செய்கிறவன்,


சொல்லின்பம்

அந்தம்: முடிவு

பரிசு: தன்மை

பகர்தல்: சொல்லுதல்

நீறு: திருநீறு

ஒருங்கே: ஒன்றாக

ஆறா: ஆறாக

பறை: முரசு

கழுக்கடை: சூலம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.